தீவி­ர­வா­தத்தை ஒழிப்பதில் பாகிஸ்­தான் சாதித்­துள்­ளது!

தீவி­ர­வா­தத்தை ஒழிப்­ப­தற்­காக பாகிஸ்­தான் பல தியா­கங்­க­ளைச் செய்து சாதித்­துள்­ளது என்று தெரி­வித்­துள்­ளது சீனா. சீனா­வின் அய­லு­ற­வுத்­துறை செய்­தித் தொடர்­பா­ளரே பாகிஸ்­தா­னுக்கு ஆத­ரவு தெரி­வித்­துள் ளார்.

பாகிஸ்­தான் ஆயுத கலா­சா­ரத்தை வளர்க்­கி­றது என்று தெரி­வித்து அந்த நாட்­டின் மீது ஏகப்­பட்ட நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கி­றது அமெ­ரிக்கா. பாகிஸ்­தா­னில் ஆயுத கலா­சா­ரம் மிகை­யாக உள்­ளது என்று அண்­மைக்­கால புள்ளி விவ­ரங்­க­ ளும் தெரி­விக்­கின்­றன. இந்த நிலை­யில் சீனா இவ்­வாறு ஆத­ரவு தெரி­வித்­துள்­ளது.

‘‘பயங்­க­ர­வா­தத்தை குறிப்­பிட்ட ஒரு நாட்­டு­டன் இணைத் துப் பேசி­வ­ரு­வதை சீனா எப்­போ­தும் எதிர்க்­கி­றது.பயங்­க­ர­வாத எதிர்ப்பு நட­வ­டிக்­கையை ஒரு குறிப்­பிட்ட உல­கெங்­கும் உள்ள பயங்­க­ர­வாத ஒழிப்பு நட­வ­டிக்­கை­யில் பாகிஸ்­தான் பல முக்­கி­ய­மான தியா­கங்­கள் மற்­றும் பங்­க­ளிப்­பு­களை செய்­துள்­ளது என்று பல முறை நாங்­கள் வலி­யு­றுத்­தி­யுள்­ளோம்.

ஒரு­வ­ருக்­கொ­ரு­வர் சுட்­டிக் காட்­டு­வ­தற்கு பதி­லாக, பரஸ்­பர மரி­யாதை அடிப்­ப­டை­யில் பயங்­க­ர­வாத எதிர்ப்பு ஒத்­து­ழைப்பை வலுப்­ப­டுத்த வேண்­டும்’’ என்று சீன அய­லு­ற­வுத்­துறை செய்­தித் தொடர்­பா­ளர் லூ காங் மேலும் தெரி­வித்­தார்.

You might also like