மாமியார் வீட்டிலிருந்து வெளியேறுகிறார் ஐஸ்வர்யா!!

நடிகை  ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது மாமியார் வீட்டில் இருந்து வெளியேறப் போகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொலிவூட் நடிகை ஐஸ்வர்யா ராய், நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்ததில் இருந்து மாமனார் அமிதாப் பச்சன், மாமியார் ஜெயாவுடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார்.

அமிதாபின் பங்களாவான ஜல்சாவில் தான் அவர்கள் வசித்து வருகிறார்கள். ஐஸ்வர்யா ராய்க்கும், மாமியார் ஜெயா பச்சனுக்கும் ஆகவே ஆகாது என்று சில காலமாகத் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் ஐஸுக்கும் மைத்துனி ஸ்வேதாவுக்கும் பிரச்சினை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐஸ்வர்யாவும், அபிஷேக்கும் சேர்ந்து மும்பையில் வீடு ஒன்றை வாங்கியுள்ளனர். ஐஸ் தனது கணவர் மற்றும் மகள் ஆராத்யாவுடன் அந்த வீட்டில் தனிக்குடித்தனம் போகப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அபிஷேக் பச்சனுக்கு தனது பெற்றோர் என்றால் உயிர். அவர்களை விட்டுவிட்டு மனைவியுடன் தனிக்குடித்தனம் போக மாட்டார் அபிஷேக். இது ஐஸ்வர்யாவுக்கும் தெரியும். அதனால் அவர் தனியாச்க செல்ல மாட்டாராம். முதலீட்டுக்காக அந்த வீட்டை வாங்கியுள்ளாராம் என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக அபிஷேக் பச்சனுக்கும், நடிகை கரிஷ்மா கபூருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் கரிஷ்மா திருமணத்திற்கு பின்னர் தனிக்குடித்தனம் போக விரும்பியதால் அபிஷேக் அவரை பிரிந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like