அஜித்தை வாழ்த்தினார் ரவிக்குமார்!

‘ஜெய் சிம்ஹா’ தெலுங்குப் படத்தின் அறிமுக விழாவில் அஜித்தைப் பற்றி பெருமையாகப் பேசியுள்ளார் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்.

நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியுள்ள படம் ‘ஜெய் சிம்ஹா’. நயன்தாரா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படம், எதிர்வரும் 12 ஆம் திகதி வெளிவர இருக்கிறது. எனவே, அதன் அறிமுன நிகழ்வில் கலந்து கொண்டு வருகின்றனர் படக்குழுவினர்.

ஒரு நிகழ்வில் பேசிய கே.எஸ்.ரவிக்குமார், “இதுவரை பல நடிகர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். ஆனால், தங்களின் தரத்துக்கு ஏற்ப எல்லோருமே வசனங்கள் அல்லது சில கட்டங்களை மாற்றச் சொல்வார்கள். அதை, தவறு என்றும் சொல்ல முடியாது. என்னிடம் எந்த மாற்றமுமே சொல்லாத நடிகர்கள் இருவர் மட்டுமே… ஒருவர் பாலையா, மற்றொருவர் அஜித்” எனத் தெரிவித்துள்ளார்.

கே.எஸ்.ரவிக்குமார் பகிர்ந்துள்ள இந்த விடயம், அஜித் ரசிகர்களைக் குஷிப்படுத்தியுள்ளது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ‘வில்லன்’ மற்றும் ‘வரலாறு’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் அஜித்.

You might also like