பெண் தலைமைக் குடும்பத்துக்கு  பொலிஸாரால் வீடு கையளிப்பு

வவுனியா, பூவரசன்குளம் பகுதியில் பெண் தலைமைக் குடும்பம் ஒன்றுக்கு
பொலிஸாரினால் வீடு கையளிக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
பூவரசன்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சமிந்த எதிரிசிங்க
தலைமையில், செட்டிகுளம் மற்றும் பூவரசன்குளம் உதவிப் பொலிஸ்
அத்தியட்சகர் மல்வலகேவினால் உத்தியோக பூர்வமாக திறந்து
வைக்கப்பட்டு வீடு பயனாளியிடம் கையளிப்பு செய்யப்பட்டது.

பூவரசன்குளம், வாரிக்குட்டியூர் யுனிட் 6 இல் வசித்து வரும் சொலமான்
மேரி சாலட் என்பவருக்கு, பூவரசன்குளம் பொலிஸ் நிலையத்தினரின்
பங்களிப்புடன் அமைக்கப்பட்ட புதிய வீடு கையளிக்கப்பட்டது.

கடந்த 1990ஆம் ஆண்டு போரில் கணவனை இழந்து இந்தியா சென்று
மீண்டும் 2011 ஆம் ஆண்டு இலங்கையில் குடியேறிய இரண்டு
பிள்ளைகளைக் கொண்ட இக் குடும்பம் வறுமை நிலையில காணப்பட்டது.

இதையடுத்து தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வழங்கப்பட்ட
கடனில் வீடு அமைத்துக் கொள்ள முயன்ற போதிலும் வீட்டினை
முடிவுறுத்த முடியாத நிலையில் இருந்தனர்.

குறித்த பெண் தலைமைக் குடும்பத்தினரில் நிலைமை பிரஜைகள் பொலிஸ்
குழுவினரால் அறியப்பட்டது. பூவரசன்குளம் பொலிஸ் நிலையப்
பொறுப்பதிகாரி இலங்கை பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்திரவின்
வழிகாட்டிலில் வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து
தென்னக்கோனின் முயற்சியில் பூவரசன்குளம் பொலிஸாரினால் உதவிகள்
வழங்கப்பட்டு 15 இலட்சம் ரூபா செலவில் குறித்த வீடு கட்டப்பட்டது.

சர்வமதத்தலைவர்கள், கிராமசேவையாளர் திரு.சிவசுப்பிரமணியம்,
பிரஜைகள் பொலிஸ் குழுவின் தலைவர், கிராம அபிவிருத்திச்சங்கம், மாதர்
அபிவிருத்திச்ங்கம், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்

You might also like