இரா­ம­நா­த­பு­ரம் பாட­சா­லை­யில் கடி­னப்­பந்து ஆடு­க­ளம் அமைப்பு!!

கிளி­நொச்சி – இரா­ம­நா­த பு­ரம் மகா­வித்­தி­யா­ல­யத்­துக்கு விமா­னப்­ப­டை­ யி­ன­ரால் புதிய கடி­னப்­பந்து ஆடு­க­ளம் அமைத்­துக் கொடுக்­கப்­பட்­டுள்­ளது.

இந்தப் பா­ட­சா­லை­யில் கடந்­த­மா­தம் கடி­னப்­பந்து துடுப்­பாட்டப் பயிற்­சி­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. அதி­ப­ரி­ன­தும் பழைய மாண­வர்­க­ள­தும் வேண்­டு­கோ­ளுக்­க­மைய வல­யக்­கல்வி திணைக்­க­ளத்­தின் அனு­ச­ர­ணை­யு­டன் பயிற்­சி­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டன.

இலங்கை துடுப்­பாட்ட சபை­யின் பயிற்­சி­யா­ளர்­க­ளுக்கு பொறுப்­பான முகா­மை­யா­ளர் மற்­றும் வடக்கு மாகாண துடுப்­பாட்ட பயிற்­சி­யா­ளர் ஆகி­யோ­ரும் இங்கு வருகை தந்­தி­ருந்­த­னர். மாவட்ட துடுப்­பாட்ட சம்­மே­ள­னமும் ஒரு­தொ­குதி பயிற்சி உப­க­ர­ணங்­களை வழங்­கி­யி­ருந்­தது. அவற்றை வைத்து பழைய மாண­வர்­க­ளது உத­வி­யு­டன் பயிற்­சி­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டன.

இத­னை­ய­டுத்து இர­ணை­மடு விமா­னப்­ப­டை­யி­ ன­ரால் சுமார் இரண்­டரை இலட்­சம் ரூபா செல­வில் புதிய ஆடு­க­ளம் அமைத்­துக்­கொ­டுக்­கப்­பட்டுள்ளது. விமா­னப் படைத்­த­ளத்­தின் கட்­டளை அதி­காரி நாண­யக்­கா­ர­வின் மேற்­பார்­வை­யில் அமைக்­கப்­பட்ட ஆடு­க­ளம் கடந்த திங்­கன்று பாட­சா­லை­யி­டம் கைய­ளிக்­கப்­பட்­டது.

You might also like