பெயர்­மாற்றி வழங்­கப்­பட்ட விரு­து­களால் கலை­ஞர்­கள் குழப்பம்!

வவு­னியா மாவட்­டச் செய­ல­கத்­தி­னால் நடத்­தப்­பட்ட கலா­சார விழா­வில் கலை­ஞர்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட விரு­து­கள் தொடர்­பில் அதி­ருப்தி தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

விருது வழங்­க­லின்­போது குழப்­பம் நில­வி­யது. பல­ருக்கு விரு­து­கள் பெயர்­மாறி வழங்­கப்­பட்­டன. அது விரை­வில் சீர்­செய்து தரப்­ப­டும் என தெரி­விக்­கப்­பட்­டது. எனி­னும் இன்­ன­மும் சீர்­செய்­யப்­ப­ட­வில்லை எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.இவ்­வி­ட­யம் தொடர்­பாக கலை­ஞர்­கள் தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது:

வவு­னியா மாவட்­டச் செய­ல­கத்­தி­னால் அண்­மை­யில் கலா­சா­ர­விழா நடத்­தப்­பட்­டது. இதன்­போது பல்­துறை சார்ந்­த­வர்­க­ளுக்கு விரு­து­கள் வழங்­கப்­பட்­டன. விரு­துக்கு தெரி­வு­செய்­யப்­பட்­ட­வர்­கள் தொடர்­பாக சர்ச்­சை­கள் நில­வின.

விரு­து­க­ளில் பெயர்­கள் பொறிக்­கப்­பட்­டி­ருந்­த­போ­தி­லும், ஏற்­பாட்­டா­ளர்­க­ளின் குழப்­பத்­தால் கலை­ஞர்­கள் பல­ருக்கு அவர்­க­ளது பெயர்­கள் பொறிக்­கப்­பட்ட விரு­து­கள் அப்­போது வழங்­கப்­ப­ட­வில்லை. வேறு ஒரு­வ­ரின் பெய­ருள்ள விரு­து­களே மேடை­யில் வைத்து வழங்­கப்­பட்­டன.

அதனை சீர்­செய்து தரு­வ­தாக , மாவட்ட கலா­சார உத்­தி­யோ­கத்­தர் அப்­போது தெரி­வித்­தி­ருந்­தார். வேக­மாக விரு­து­களை வழங்­க­வேண்­டி­யி­ருந்­த­மை­யி­னால் இவ்­வாறு பெயர்­மா­றிச் சென்­று­விட்­டது.

சரி­யான முறை­யில் பெயர்­கள் பொறிக்­கப்­பட்ட விரு­து­கள் உரி­ய­வர்­க­ளி­டம் விரை­ வில் சேர்ப்­பிக்­கப்­ப­டும் என்­றும் அவர் தெரி­வித்­தி­ருந்­தார். ஆனால் இன்­ன­மும் அது நடை­பெ­ற­வில்லை– – என்­ற­னர்.

You might also like