பாட­சாலைக் காணியை மீட்­டுத்­த­ரக்கோரி கவ­ன­வீர்ப்பு!!

முள்­ளி­ய­வ­ளை­யில் தனி­யார் ஒரு­வ­ரால் அப­க­ரிக்­கப்­பட்ட பாட­சா­லைக் காணியை மீட்­டு­த­ரக்­கோரி பிர­தேச மக்­கள் நேற்­றுக் கவ­ன­வீர்ப்புப் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். போராட்­டத்­தைத் தொடர்ந்து காணி மீட்­டுக் கொடுக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது. அதையடுத்துப் போராட்டம் நிறுத்தப்பட்டது.

முள்­ளி­ய­வ­ளைப் பூதன்­வ­யல் கிரா­மத் தில் இயங்­கி­வந்த ஆரம்ப பாட­சா­லைக் காணி­யைத் தனி­யார் ஒரு­வர் அப­க­ரித்து வைத்­தி­ருந்­தார். அது தொடர்­பில் முல்­லைத்­தீவு மாவட்ட நீதி­மன்­றில் வழக்குத் தொட­ரப்­பட்­டது. கடந்த ஆண்டு டிெசம்­பர் மாதம் 14ஆம் திகதி நீதி­மன்­றம் பாட­சா­லைக்­கு­ரிய காணி என தீர்ப்­ப­ளித்த­து.

தீர்ப்பு வழங்­கப்­பட்­ட­போ­தும் குறித்த தனி­ந­பர் வெளி­யே­றாத நிலை­யில் கடந்த 4ஆம் திகதி நீதி­மன்ற பதி­வா­ளர் ஊடாக அவர் சட்­ட­ரீ­தி­யாக வெளி­யேற்­றப்­பட்டு குறித்த காணி முல்­லைத்­தீவு வல­யக் கல்­வித்­தி­ணைக்­க­ளத்­தின் ஊடாக பாட­சா­லைக்கு வழங்­கப்­பட்­டது.

நீதி­மன்ற உத்­த­ரவை மீறி நேற்றும் குறித்த நபர் காணிக்­குள் மாண­வர்­கள், பெற்­றோர்­களை உட்­செல்லவிடா­மல் தடுத்­துள்­ளார். அத­னைத் தொடர்ந்தே மாண­வர்­க­ளின் பெற்­றோர்­கள் மற்­றும் கிராம மக்­கள் ஒன்று சேர்ந்து காணியை விடு­விக்­கக் கோரி வீதியை மறித்து ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.
இது தொடர்­பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது:

1980ஆம் ஆண்டு காலப்­ப­கு­தி­க­ளில் கொக்­கி­ளாய், கொக்­குத்­தொ­டு­வாய், கரு­நாட்­டுக்­கேணி, தென்­ன­ம­ர­வாடி போன்ற பகு­தி­க­ளில் இருந்து இடம்­பெ­யர்ந்த மக்­கள் பூதன்­வ­யல் கிரா­மத்­தில் வாழ்ந்து வந்­த­னர். இவர்­கள் தங்­கள் பிள்­ளை­க­ ளின் கல்­விச்­செ­யற்­பாட்­டுக்­காக அன்­றைய கால­கட்­டத்­தில் குறித்த பகு­தி­யில் ஐந்து ஏக்­கர் வரை­யான பகு­தி­யில் பாட­சா­லைக் கட்­ட­டங்­கள் அமைத்து பாட­சா­லைச் செயற்­பாட்டை மேற்­கொண்­டுடிருந்­த­னர்.

கரு­நாட்­டுக்­கேணி அ.த.க.பாட­ சாலை என்ற பெய­ரில் அது இயங்­கி­வந்­தது. இதன்­பின்­னர் அங்­கி­ருந்து 2009ஆம் ஆண்டு இடம்­பெ­யர்ந்த மக்­கள் 2010 ஆம் ஆண்டு மீள்­கு­டி­ய­மர்த்­தப்­பட்­ட­னர். ஏற்­க­னவே இடம்­பெ­யர்ந்த மக்­கள் தங்­கள் சொந்த இடங்­க­ளான கொக்கி­ளாய், கொக்­குத்­தொ­டு­வாய், கரு­நாட்­டுக்­கேணி, தென்­ன­ம­ர­வாடி போன்ற பகு­தி­க­ளில் தங்­கள் சொந்த காணி­க­ளில் குடி­ய­மர்த்­தப்­பட்­ட­னர்.ஷ

பூதன்­வ­யல் கிரா­மத்­தில் நிலை­யாக இருந்த மக்­க­ளும் மீள்­கு­டி­ய­மர்த்­தப்­பட் ட­னர். மத்­தி­ய­வ­குப்பு காணி­க­ளா­கக் காணப்­பட்ட குறித்த பாட­சாலை காணி­யில் இரண்டு ஏக்­கர் காணி­கள் பிர­தேச செய­ல­கத்­தால் தனி­யா­ருக்கு வழங்­கப்­பட்­டுள்­ளன.

இந்­த­நி­லை­யில் ஏனைய 3 பரப்­புக் காணியை தென்­னி­லங்கை அர­சி­யல் வாதி­யின் ஆத­ரவு மிக்க குறித்த தனிநபர் அப­கரித்து அதற்­கான சில சான்­றி­தழ்­க­ளைப் பெற்று வீடு கட்டி தென்­னங்­கன்­று­களை நட்­டுள்­ளார்.

இவ­ருக்கு எதி­ராக கிராம அபி­வி­ருத்­திச் சங்­கம் குறித்த மூன்று ஏக்­கர் காணி­யும் பாட­சா­லைக்கு உரி­யது,
அதில் பாட­சாலை கட்­ட­வேண்­டும் என்று கோரிக்கை விடுத்­தது.இந்த நிலை­யி­லேயே குறித்த காணி பாட­சா­லைக்­கு­ரி­யது என்று கடந்த 14ஆம் திகதி தீர்ப்பு வழங்­கப்­பட்­டது.

அதற்­க­டுத்து கடந்த இரண்டு நாள்­கள் பாட­சா­லைச் செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­து­வ­ரும்­போது நேற்று பாட­சாலை துப்பு­ரவுப் பணி­களை மேற்­கொள்­வ­தற்­காக பெற்­றோர்­கள் சென்­றி­ருந்­த­போது குறித்த பெற்­றோர்­களை காணிக்­குள் செல்­ல­வேண்­டாம், என்று காணிக்­குள் வீடு­கட்­டிய குறித்த தனி­ந­பர் தெரி­வித்­துள்­ளார்.

இந்­த­நி­லை­யில் பெற்­றோர்­கள், கிராம மக்­க­ளால் கவ­ன­வீர்ப்பு ஆர்ப்­பாட்­டம் மேற்­கொள்ளப்­பட்­டது. இத­னைத் தொடர்ந்து சம்­பவ இடத்­துக்கு விரைந்த முள்­ளி­ய­வளை பொலி­ஸார் மற்­றும் கரை­து­றைப்­பற்று பிர­தேச காணி உத்­தி­யோ­கத்­தர், கிராம அலு­வ­ல­ர் ஆகி­யோர் மேற்­கொண்ட நட­வ­டிக்­கை­யைத் தொடர்ந்து தனி­ந­பரை காணி­யை விட்டு வெளி­யேற்றி மாண­வர்­க­ளின் கற்­றல் செயற்­பாட்டுக்கு நடவடிக்கை எடுத்தனர்.

You might also like