6 ஆண்­டு­கள் மைத்­தி­ரி­யின் பத­விக் காலம்!!

இது ராஜி­த­வின் கணிப்பு

அரச தலை­வர் மைத்­தி­ரி­பா­ல­வின் பதவி ஆறு ஆண்­டு­க­ளுக்­கு­ரி­யது என்று நம்­பு­கின்­றோம். அடுத்த அரச தலை­வ­ரின் பத­விக் காலமே 5 ஆண்­டு­க­ளுக்கு குறைக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு அமைச்­ச­ரும், அமைச்­ச­ர­வைப் பேச்­சா­ள­ரு­மான ராஜித சேனா­ரத்ன தெரி­வித்­தார்.

அமைச்­ச­ரவை முடி­வு­ களை அறி­விக்­கும் செய்­தி­யா­ளர் சந்­திப்பு நேற்று நடை­பெற்­றது. இதில் கலந்து கொண்டு கருத்­துத் தெரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

கடந்த அரச தலை­வர் தேர்­த­லின் பின்­னர் 19ஆம் திருத்­தம் கொண்­டு­வ­ரப்­பட்டு அதன் மூல­மாக அரச தலை­வ­ரின் ஆட்­சிக்­கா­லம் ஐந்து ஆண்­டு­க­ளாக மட்­டுப்­ப­டுத்­த­பட்­டுள்­ளது. 2020ஆம் ஆண்டு அரச தலை­வர் தேர்­தலை நடத்­து­வது குறித்து ஆரா­யப்­பட்ட நிலை­யில் சில நிபு­ணர்­கள் அதனை மறுத்­துள்­ள­னர்.

அரச தலை­வர் தேர்­தல் 2021 ஆம் ஆண்டே நடத்­தப்­பட முடி­யும் என்று அரச தலை­வ­ருக்­குத் தெரி­வித்­துள்­ள­னர். இது குறித்து அரச தலை­வர் உயர் நீதி­மன்­றத்­தி­டம் வின­வி­யுள்­ளார். இன்­னும் நீதி­மன்­றம் தீர்­மா­னம் தெரி­விக்­க­வில்லை.

எனி­னும் நீதி­மன்ற தீர்­மா­ன­மும் நாம் கூறு­வ­தைப் போ­லவே அமை­யும் என்று நம்­பு­கின்­றோம். எவ்­வாறு இருப்­பி­னும் பொதுத் தேர்­தல் 2020ஆம் ஆண்­டும் அரச தலை­வர் தேர்­தல் 2021 ஆம் ஆண்டு தான் நடத்­தப்­பட வேண்­டும். சட்­டம் எப்­போ­தும் முன்­னோக்­கியே பய­ணிக்­கும் இப்­போது செயற்­ப­டுத்த முடி­யாது -– என்­றார்.

‘அரச தலை­வர் தனது பத­விக் காலத்தை அடுத்த தட­வைக்­கும் நீடிக்­கும் நோக்­கத்­தில் இத­னைச் செய்­கின்­றாரா?’ என்று கேள்வி எழுப்­பப்­பட்­ட­தற்கு, அவ்­வாறு அவர் தனது அடுத்த ஆட்­சிக் காலத்தை நீடிப்­பார் என்­றால் இந்­த­ளவு தூரம் சட்­டத்­தின் நுணுக்­கங் களை ஆராய வேண்­டிய அவ­சி­யம் இல்லை.

அவர் தனது பத­விக் காலம் முடி­யும் வரை­யில் அமை­தி­யாக இருந்து மீண்­டும் போட்­டி­யிட முடி­யுமே. அவர் அவ்­வா­றான நோக்­கத்­தில் இல்லை என்­பதே இதன் அர்த்­தம் என்று நாம் நம்­பு­கின்­றோம் -– என்­றார்.

You might also like