கிழக்கு முன்­னாள் முத­ல­மைச்­ச­ரி­டம் விசா­ரணை நடத்த நீதி­வான் உத்­த­ரவு!!

சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ர­ஸுக்­குச் சொந்­த­மான காணியை மோசடி செய்து உடைமை­யாக்­கிய குற்­றச்­சாட்­டுத் தொடர்­பில் கிழக்கு மாகாண முன்­னாள் முத­ல­மைச்­சர் ஹாபிஸ் நசீர் அஹ­மட்­டி­டம் விசா­ரணை மேற்­கொள்­ளு­மாறு கொழும்பு மோசடி தடுப்­புப் பிரிவு பொலி­ஸா­ருக்கு கோட்டை நீதி­வான் உத்­த­ரவு பிறப்­பித்­தார்.

கிழக்கு மாகாண முன்­னாள் முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ராக கொழும்பு மோச­டிப் தடுப்­புப் பிரிவு தாக்­கல் செய்­தி­ருந்த வழக்கு நீதி­வான் லங்கா ஜய­ரத்ன முன்­னி­லை­யில் நேற்று விசா­ர­ணைக்கு வந்­தது.

இதன்­போது, முன்­னாள் முத­ல­மைச்­ச­ரின் முக­வ­ரியை கண்­டு­பி­டிக்க முடி­யா­தி­ருப்­ப­தா­க­வும் வாக்­கு­மூ­லத்­தைப் பெற்­றுக்­கொள்ள முடி­யா­தி­ருப்­ப­தா­க­வும் கொழும்பு மோச­டிப் தடுப்­புப் பிரி­வுப் பொலி­ஸார் நீதி­வா­னுக்கு தெரி­வித்­த­னர்.

முத­லாம் சந்­தேக நபர் அறி­யப்­ப­டாத ஒரு நப­ரல்ல என்று தெரி­வித்த நீதி­வான் தரா­த­ரம் பார்க்­காது யுனிட்டி பில்­டர்ஸ் நிறு­வ­னத்­தோடு தொடர்­பு­பட்ட அவ­ரது சகல விட­யங்­க­ளை­யும் உள்­ள­டக்­கி­ய­தாக வாக்கு மூலத்தைப் பதிவு செய்து உட­ன­டி­யாகச் சமர்ப்­பிக்­கு­மாறு கடும் தொனி­யில் பொலி­ஸா­ருக்கு உத்­த­ர­விட்­டார்.

வழக்­கின் முறைப்­பாட்­டா­ளர் தரப்­பில் நீதி­மன்­றில் முன்­னி­லை­யான மூத்த சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்­தீன், முஸ்­லிம் காங்­கி­ர­ஸுக்­குச் சொந்­த­மான காணியை மோச­டி­யான முறை­யில் அப­க­ரித்­தமை மட்­டு­மல்­லா­மல், அர­சுக்­குச் செலுத்த வேண்­டிய முத்­திரை வரி­யை­யும் செலுத்­தா­மல் மோசடி செய்­தி­ருப்­ப­தால் தண்­ட­னைச் சட்­டக் கோவை­யில் 406 ஆவது உறுப்­பு­ரைக்­க­மைய 2 ஆண்­டு­கால சிறைத் தண்­டனை வழங்­கப்­ப­டக் கூடிய குற்­றத்தை சந்­தேகநபர் மேற் கொண்­டுள்­ள­தால் அவரை கைது செய்ய உத்­த­ர­ விட வேண்­டும் என்று நீதி­வா­னி­டம் கோரிக்கை விடுத்­தார்.

கார்­சன் கம்­பர்­பர்ச் நிறு­வ­னம் சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ர­ஸுக்கே மேற்­படி காணியை விற்­ற­தாக ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லம் அளித்­தி­ருக்­கும் நிலை­யில் முத­லாம் சந்­தேக நப­ரான நஸீர் அஹ­மட்டை கைது செய்ய போது­மான சாட்­சி­யங்­க­ளும் நியா­ய­மான கார­ணங்­க­ளும் இருப்­ப­தாக சுட்­டிக் காட்­டி­னார்.

முத­லாம் சந்­தேக நபரை கைது செய்ய உத்­த­ர­வி­டு­வ­தற்கு முன் முத­லாம் சந்­தேக நப­ரின் வாக்­கு­மூ­லத்தைப் பதிவு செய்ய வேண்­டும் என்று குறிப்­பிட்ட நீதி­வான் லங்கா ஜய­ரத்ன அதன் பின் சகல சாட்­சி­யங்­கள் மற்­றும் ஆதா­ரங்­களை ஆராய்ந்த பின்பே அவ்­வா­றான உத்­த­ர­வொன்றைப் பிறப்­பிக்க முடி­யும் என்று சுட்­டிக்­காட்­டி­ய­ தோடு நவம்­பர் 8ஆம் திகதி நடந்த வழக்கு விசா­ர­ணை­யி­லி­ருந்து நேற்று வரை நஸீர் அஹ­மட்­டி­டம் இருந்து வாக்­கு­மூ­லம் பெறப்­ப­டாமை குறித்து பொலி­ஸாரை எச்­ச­ரித்­தார்.

You might also like