வட­கொ­ரிய – தென்­கொ­ரிய ஒப்­பந்­தத்­துக்கு குவி­யும் பாராட்டு!!

வட­கொ­ரியா, தென்­கொ­ரியா நாடு­க­ளுக்கு இடையே ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்ள குளிர்­கால ஒலிம்­பிக் தொடர் தொடர்­பான ஒப்­பந்­தத்­துக்கு பாராட்­டுக்­கள் குவிந்து வரு­கின்­றன. தென்­கொ­ரி­யா­வில் அடுத்த மாதம் குளிர்­கால ஒலிம்­பிக் தொடர் நடை­பெ­ற­வுள்­ளது. இந்­தத் தொட­ரில் பங்­கேற்க தென்­கொ­ரி­யா­வின் எதி­ரி­நா­டான வட­கொ­ரி­யா­வும் விருப்­பம் தெரி­வித்­தது.

இதை­ய­டுத்து இது தொடர்­பான பேச்­சுக்­கள் இடம்­பெற்று வந்­தன. தற்­போது இந்த விட­யம் தொடர்­பில் இணக்­கப்­பாடு ஏற்­பட்­டுள்­ளது.
இதன்­படி இரண்டு நாடு­க­ளுக்­கும் இடை­யி­லும் ஒப்­பந்­தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டுள்­ளது. இதற்கு பல தரப்­புக்­க­ளி­டம் இருந்­தும் பாராட்­டுக்­கள் குவிந்து வரு­கின்­றன.

‘‘இரண்டு நாடு­க­ளுக்­கும் இடையே ஏற்­பட்­டுள்ள ஒப்­பந்­தம், கொரி­யத் தீப­கற்­பத்­தில் நில­விய பதற்­ற­மான சூழ்­நி­லை­யைத் தணிக்க உத­வும். இது அமைதி திரும்­பு­வ­தற்­கான முதல் படி­யா­கவே பார்க்­கப்­ப­டு­கி­றது’’ என்று ஐ.நா. சபை­யின் பொதுச் செய­லா­ளர் குத்­தே­ரஸ் தெரி­வித்­தார்.

‘‘இரு நாடு­க­ளுக்கும் இடை­யே­யான இந்த பேச்சை ரஷ்யா வர­வேற்­கி­றது. மாற்­றத்­துக்­கான முதல்­ப­டி­யாக இந்த பேச்சு இருக்­கும். இரண்டு நாடு­க­ளுக்­கும் இடையே கடை­சி­யாக கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்­பர் மாதம் உயர்­மட்ட அதி­கா­ரி­கள் அள­வி­லான பேச்சு நடந்­தது. பெட்­ரோல், டீசல் மற்­றும் நிலக்­கரி என பல்­வேறு தடை­க­ளுக்கு வட­ கொ­ரியா உள்­ளா­கி­யுள்ள நிலை­யில், வட­கொ­ரிய அதி­ப­ரின் இந்த முடிவு அவர் கீழே இறங்கி வரத் தயா­ராக உள்­ளார் என்­ப­தையே காட்­டு­கி­றது’’ என்று ரஷ்யாவின் தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

You might also like