ஹொண்­டு­ரா­ஸில் நில­ந­டுக்­கம் – சுனாமி எச்­ச­ரிக்கை விடுப்பு!

மத்­திய அமெ­ரிக்க நாடான ஹொண்­டு­ரா­ஸில் நேற்று நில­ந­டுக்­கம் ஏற்­பட்­டது. இந்த நில­ந­டுக்­கத்­தைத் தொடர்ந்து அங்கு சுனாமி எச்­ச­ரிக்­கை­யும் விடுக்­கப்­பட்­டது.

ஹொண்­டு­ராஸ் -– கேமேன் தீவு­க­ளுக்கு இடையே உரு­வான இந்த நில­ந­டுக்­கம் ரிச்­டர் அள­வு­கோ­லில் 7.6 அல­கா­கப் பதி­வா­னது என்று அமெ­ரிக்க புவி­யி­யல் ஆய்வு மையம் தெரி­வித்­துள்­ளது.

இந்த நில­ந­டுக்­கம் ஹொண்­டு­ரா­சின் பாரா பட்­டுகா நக­ரில் இருந்து 202 கிலோ­மீற்­றர் தொலை­வில் மையம் கொண்­டி­ருந்­தது. சுனாமி எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டதை அடுத்து கரை­யோ­ரப் பகு­தி­க­ளில் வாழும் மக்­கள் அங்­கி­ருந்து வெளி­யே­று­மாறு அறி­வு­றுத்­தப்­பட்­ட­னர்.

You might also like