ஆறு மாதங்­க­ளில் புதிய காங்­கி­ரஸ்- ராகுல்காந்­தி­யின் கணிப்பு

‘‘அடுத்த ஆறு மாதங்­க­ளில் காங்­கி­ரஸ் கட்­சி­யில் அதி­ர­டி­யான மாற்­றங்­கள் ஏற்­ப­டும்’’ என்று ராகுல் காந்தி தெரி­வித்­துள்­ளார்.  பக்­ரை­னில் தற்­போது சுற்­றுப் பய­ணம் மேற்­கொண்­டுள்­ளார் ராகுல் காந்தி. அங்­குள்ள இந்­தி­யர்­கள் மத்­தி­யில் நேற்­று­முன்­தி­னம் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

‘‘பார­திய ஜனதா அரசு எல்லா வகை­யி­லும் தோல்­வி­யைச் சந்­தித்து உள்­ளது. நாட்­டில் வேலை வாய்ப்­பின்மை மிக மோச­மான நிலையை எட்­டி­யுள்­ளது. இதற்­குத் தீர்வு காண எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­கப்­ப­ட­வில்லை. அதற்­குப் பதி­லாக மக்­களைப் பிரித்­தா­ளும் சூழ்ச்­சி­யில் பார­திய ஜனதா ஈடு­பட்­டுள்­ளது. மக்­கள் மத்­தி­யில் கல­வ­ரத்­தை­யும் தூண்­டு­கி­றது. ஜாதி ரீதி­யாக, மத ரீதி­யாக மக்­களை பிரித்து அதன் மூலம் ஆதா­யம் தேடப் பார்க்­கி­றது.

இப்­போது நாடு அமை­தி­யாக இருப்­பது போன்ற ஒரு தோற்­றம் இருக்­க­லாம். ஆனால் பார­திய ஜன­தாக் கட்சி பல்­வேறு சிக்­கல்­க­ளை ­யும், மோதல் போக்­கு­க­ளை­யும் உரு­வாக்கி வைத்­துள்­ளது. இது பிற்­கா­லத்­தில் பிரச்­சி­னை­ களை ஏற்­ப­டுத்­தும் வகை­யில் மாற­லாம். அடுத்த 6 மாதங்­க­ளில் காங்­கி­ர­சில் புதிய மாற்­றங்­கள் ஏற்­ப­டும்.

அமைப்பு ரீதி­யில் பல்­வேறு அதி­ர­டி­யாக மாற்­றங்­கள் செய்­யப்­ப­டும். இனி புதிய காங்­கி­ர­சாக ஒளி­ரப் போவதை பார்ப்­பீர்­கள்’’ என ராகுல் காந்தி மேலும் தெரி­வித்­தார்.

You might also like