மைத்­தி­ரி­யின் செய­ல­கமா? பைத்­தி­யக்­கார்­க­ளின் கூடா­ரமா?

மகிந்த காலத்து ஊழல் மோசடி தொடர்­பான விசா­ர­ணைக் குழு­வால் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­டம் சமர்­பிக்­கப்­பட்ட அறிக்கை தம்­மி­டம் இல்லை என்று அரச தலை­வ­ரின் செய­லர் கூறி­யுள்­ளார். அப்­ப­டி­யா­யின் அது அரச தலை­வர் செய­ல­கம் கிடை­யாது. பைத்­தி­யக்­கா­ரர்­கள் இருக்­கும் கூடா­ரா­மா­கும்.

இவ்­வாறு மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யின் தலை­வர் அநு­ர­கு­மார திசா­நா­யக்க தெரி­வித்­தார். நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

கட்­சித் தலை­வர்­கள் கூட்­டத்­தில் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்­தின் பிர­கா­ரம் பிணை­முறி மற்­றும் பெரிய ஊழல் மோசடி தொடர்­பான இரு அறிக்­கை­க­ளை­யும் நாடா­ளு­மன்­றத்­தில் சமர்ப்­பித்­தி­ருக்க வேண்­டும். அதன்­பின்­னரே தலைமை அமைச்­ச­ருக்கு உரை நிகழ்த்த இட­ம­ளித்­தி­ருக்க வேண்­டும். அறிக்­கை­கள் தொடர்­பான விட­யம் தீர்­வின்றி இருக்­கை­யில் சபா­நா­ய­கர் அதனை முடிக்­கா­மல் இரண்­டா­வது நிகழ்ச்சி நிர­லான தலைமை அமைச்­சர் உரைக்கு சென்­றமை பெரும் தவ­றா­கும்.

அமர்­வுக்­கான அறிக்­கை­கள் இரண்­டை­யும் பெற்­றுக்­கொள்­வ­தற்கு அதி­கா­ரி­களை அழைத்து விசா­ரித்து இருக்க வேண்­டும். எனி­னும் தீர்க்க வேண்­டிய பிரச்­சி­னையை தட்­டிக்­க­ழித்து ரணி­லின் உரைக்கு சென்­றது பெரும் தவ­றா­கும். இதன் ஊடாக சபை தவ­றாக வழி­ந­டத்­தப்­பட்­டுள்­ளது.

எப்­ப­டி­யா­வது பிணை­முறி தொடர்­பான அறிக்­கையை 17 ஆம் திகதி சமர்ப்பிப்­பது போன்று முன்­னைய ஆட்­சி­யின் பெரிய ஊழல் மோசடி தொடர்­பான அறிக்­கை­யை­யும் நாடா­ளு­மன்­றத்­தில் சமர்ப்­பிக்க வேண்­டும் -– என்­றார்.

You might also like