தேசிய ரீதி­யில் டெங்குத் தொற்று குடா­நாட்­டுக்கு இரண்டாவது இடம்!!

டெங்­குவை விரட்ட மாற்­று­வி­யூ­கம் அமைக்­கு­மாறு மக்­கள் கோரிக்கை

இலங்­கை­யில் டெங்­கு­நோய் தாக்­கத்­தில் மாவட்ட ரீதி­யில் இரண்­டா­வது இடத்தை யாழ்ப்­பா­ணம் பிடித்­துள்­ளது. வடக்கு மாகா­ணத்­தில் முதல் நிலை­யில் உள்­ளது. யாழ்ப்­பா­ணக் குடா­நாட்­டின் இந்த நிலை அனை­வ­ரி­டத்­தி­லும் விச­னத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

கட்­டுப்­பாட்டு வாரம், டெங்கு ஒழிப்­புச் செயல்­திட்­டம் என்று பல நட­வ­டிக்­கை­கள் எடுக்­கும் சுகா­தர அதி­கா­ரி­கள் மாற்று வியூ­கங்­களை அமைத்து டெங்கு நுளம்பை மாநாட்­டில் இருந்து விரட்ட வேண்­டும் என்று மக்­கள் கேட்­டுக் கொண்­ட­னர்.

சுகா­தார அமைச்­சின் தோற்று நோய் விஞ்­ஞா­னப் பகு­தி­யி­ன­ரால் டெங்கு நோய்த் தொற்று தொடர்­பான புள்­ளி­வி­வ­ரங்­கள் வாராந்­தம் வெளி­யி­டப்­ப­டு­கின்­றன. அந்­தப் புள்­ளி­வி­வ­ரங்­க­ளின்­படி நடப்­பாண்­டில் ஜன­வரி மாதம் முதல் வாரத்­தில் இலங்கை முழு­வ­தும் டெங்கு நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளு­டைய புள்ளி விவ­ரங்­கள் வெளி­யி­டப்­பட்­டள்­ளன.

அந்த விவ­ரங்­க­ளின்­படி டெங்கு நோய்த் தொற்­றுக்கு உள்­ளா­ன­வர்­கள் அதி­க­முள்ள இரண்­டா­வது மாவட்­ட­மாக யாழ்ப்­பா­ணம் இனம் காணப்­பட்­டுள்­ளது. முத­லா­வது மாவட்­ட­மாக கொழும்பு உள்­ளது.
கடந்த வரு­டம் ஜன­வரி மாதம் முழு­தும் யாழ்ப்­பா­ணக் குடா­நாட்­டில் 625 பேரே டெங்கு நோய்க்கு இலக்­க­கா­கி­யி­ருந்­த­னர்.

நடப்­பாண்­டில் முதல் வாரத்­தி­லேயே 113பேர் யாழ்ப்­பா­ணத்­தில் டெங்கு நோய்க்கு இலக்­கா­கி­யுள்­ள­னர். யாழ்ப்­பா­ணம் மாந­கர சபைக்­குட்­பட்ட பகு­தி­கள், சாவ­கச்­சேரி, சங்­கானை, போன்ற பகு­தி­க­ளில் அதி­க­மா­ன­வர்­கள் டெங்­கு­வுக்கு இலக்­கா­கி­யுள்­ள­னர்.

வடக்கு மாக­ணத்­தில் வன்­னிப் பெரு­நி­லப்­ப­ரப்­பில் உள்ள மாவட்­டங்­க­ளில் மொத்­த­மா­கவே 17 டெங்கு நோயா­ளர்­கள் இனங்­கா­ணப்­பட்­டுள்­ள­னர். அவற்­று­டன் ஒப்­பி­டும் போது யாழ்ப்­பா­ணத்­தின் டெங்­கு­நோய்ப் பர­வல் பல மடங்கு அதி­க­ரித்­த­தா­கவே காணப்­ப­டு­கி­றது. கிளி­நொச்­சி­ யில் 9 பேரும், முல்­லைத்­தீ­வில் 4 பேரும், வவு­னி­யா­வில் 4 பேரும் டெங்­கு­வுக்கு இலக்­கா­கி­யுள்­ள­னர்.

மன்­னா­ரில் எவ­ரும் பாதிக்­கப்­ப­ட­வில்லை என்று அந்­தப் புள்­ளி­ வி­வ­ரங்­கள் கூறு­கின்­றன. யாழ்ப்­பா­ணக் குடா­நா­டும் கொழும்பு போன்ற ஒரு நிலைக்கு தள்­ளப்­பட்­டு­வி­டக் கூடாது என்று இங்­குள்ள சுகா­தார மருத்­துவ அதி­கா­ரி­கள் செயற்­ப­டும் போதும், டெங்கு நோய் குறைந்­த­தாக இல்லை. சனத்­தொ­கைப் பரம்­பல் அதி­க­ரித்­துக் காணப்­ப­டு­வது கார­ணம் என்று கூறப்­ப­டு­கின்­றது.

You might also like