நாண­யத் தாள்­க­ளால் ஐயப்பனுக்கு அலங்­கா­ரம்!!

யாழ்ப்­பா­ணத்­தில் உள்ள இடம் ஒன்­றில் ஐயப்­பன் சாமிக்கு இலங்கை நாண­யத் தாள்­க­ளைப் பயன்­ப­டுத்தி அலங்­கா­ரம் செய்து வழி­பாடு மேற்­கொள்­ளப்­பட்டுள்ளது.

அது பற்­றிய புகைப்­ப­டங்­கள் முகப்­புத்­தங்­க­ளில் நேற்­று­முன்­தி­னம் தொடக்­கம் தர­வேற்­றப்­பட்­டு வருகின்றது. நாண­யத் தாள்­க­ளைச் சேத­மாக்­கு­தல், உரு­மாற்­றம் செய்­தல் தண்­ட­னைக்கு உரிய குற்­ற­மாக அறி­விக்­கப்­பட்­டுள்­ள­து.­

சேத­மாக்­கப்­பட்ட நாண­யத் தாளின் முகப்பு பெறு­மதி அற்­றுப்­போ­கும் என­வும் மத்­திய வங்கி அறி­வித்­தி­ருக்­கும் நிலை­யில் மேற்­படி நாண­யத்­தாள்­க­ளால் அலங்­கா­ரம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. 100, 50, 20 ரூபா நாண­யத்­தாள்­க­ளால் குறித்த இடம் அலங்­க­ரிக்­கப்­பட்­டி­ருப்­ப­தைக் காண­லாம்.

You might also like