விஜய் சேதுபதிக்கு பெரியார் விருது!!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு பெரியார் விருது வழங்கப்படவுள்ளது. தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் சார்பில் இயல், இசை, நாடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வருடம் தோறும் பெரியார் விருது வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, அறம் பட இயக்குனர் கோபி நயினார் உள்ளிட்ட 11 பேருக்கு பெரியார் விருதுகள் வழங்கப்படவுள்ளன. எதிர்வரும் 15, 16 ஆகிய திகதிகளில் சென்னை பெரியார் திடலில் நடக்கும் திராவிடர் திருநாள் விழாவில் இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன.

விஜய் சேதுபதிக்கு பெரியார் விருது கிடைத்துள்ளதை நினைத்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

You might also like