‘ராஜா ரங்குஸ்கி’ படத்தில் நடனமாடுகிறார் யுவன்!!

தரணிதரன் இயக்கி வரும் ‘ராஜா ரங்குஸ்கி’ படத்தில் இசையமைப்பாளர் யுவுன் ஷங்கர் ராஜா ஒரு பாட்டுக்கு நடனம் ஆடவுள்ளார்.

‘மெட்ரோ’ படம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சிரிஷ். அடுத்ததாக இவர் நடித்து வரும் படம் ‘ராஜா ரங்குஸ்கி’. இந்தப்படத்தின் நாயகியாக சாந்தினி நடிக்கிறார். மேலும் இந்தப் படத்தில் அனுபமா குமார், சத்யா உள்பட பலரும் நடிக்கின்றனர்.

‘பர்மா’ படத்தை இயக்கிய தரணிதரன் இந்தப்படத்தை இயக்கி வருகிறார். படத்தைத் தரணிதரனும், வாசன் புரொடக்ஷனுடன் இணைந்து தயாரிக்கின்றனர். படத்துக்கு . யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு இசை அமைத்து தானே பாடிய யுவனை, ஆட வைக்க முடிவு செய்தது படக்குழு. தனக்கு ஆட வராது என்று முதலில் மறுத்தார் யுவன். பின்னர் நண்பர்களின் வற்புறுத்தலுக்காக முறையாகப் பயிற்சி எடுத்து நடனமாடியுள்ளார்.

You might also like