சிறுவர்களின் உரிமைகள்- ஜெனீவாவில் அடுத்த வாரம் ஆய்வு!!

சிறுவர்களின் உரிமைகள் தொடர்பாக அடுத்த வாரம் ஜெனீவாவில் ஆய்வு செய்யத் திட்டமிட்டுள்ளது.

எதிர்வரும் 15 ஆம் மற்றும் 16 ஆம் திகதிகளில் குறித்த ஆய்வு இடம்பெறவுள்ளது என்று மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது. 18 நிபுணர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களைக் கொண்ட குழு அதற்காக நியமிக்கப்பட்டுள்ளது.

சிறுவர் உரிமைகள் தொடர்பான ஐ.நாவின் சாசனத்தை எந்த வகையில் நாடுகள் நடைமுறைப்படுத்தியுள்ளன என்ற அடிப்படையில் இந்த ஆய்வு நடைபெறவுள்ளது.

அதில் பல நாடுகளிலும் உள்ள சிறுவர்களின் தற்கால நிலமைகள் ஆய்வு செய்யப்படும். முக்கியமாக இலங்கையும் கவனத்தில் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like