காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா கடனுதவி!!

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு, 45.27 மில்லியன் டொலர்களை இந்தியா கடனாக வழங்கவுள்ளது. அதற்கான உடன்பாட்டில் இந்தியாவும் இலங்கையும்   கையெழுத்திட்டுள்ளன.

நிதி அமைச்சின் செயலர் கலாநிதி சமரதுங்கவும், இந்தியாவின் எக்.சிம் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் டேவிட் ரஸ்க்குயின்ஹாவும் அந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தித் திட்டத்தை, துறைமுக அதிகார சபை மேற்கொள்ளவுள்ளது.

You might also like