சென். அன்ரனிஸ்  அசத்தல் ஆட்டம்

அராலி மாவத்தை விளை­யாட்­டுக் கழ­கம் நடத்­தும் அணிக்கு 11 வீரர்­கள் பங்­கு­பற்­றும் கால்­பந்­தாட்­டத் தொட­ரில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­டத்­தில் சென். அன்­ர­னிஸ் அணி வெற்­றி­பெற்­றது.

அராலி மாவத்தை விளை­யாட்­டுக் கழக மைதா­னத்­தில் இடம்­பெற்ற இந்த ஆட்­டத்­தில் விளான் சென். அன்­ர­னிஸ் விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து நியூ­வா­ரி­யர்ஸ் அணி மோதி­யது.

கோல்­கள் இல்­லா­மல் முடி­வுக்கு வந்­தது முதல் பாதி. இரண்­டா­வது பாதி­யி­லும் அதே நிலமை­தான். நிர்­ண­யிக்கப்பட்ட நிமி­டங்­க­ளின் நிறை­வில் கோல்­கள் எவை­யும் பதி­வா­கா­ததை அடுத்து சம­நி­லைத் தவிர்ப்பு உதை­க­ளில் வெற்­றி­யைத் தீர்­மா­னிக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. 5:4 என்ற கோல் கணக்­கில் சென். அன்­ர­னிஸ் அணி வெற்­றி­பெற்­றது.

You might also like