உடுத்துறை பாரதி  இறுதிக்குத் தகுதி

மரு­தங்­கேணி பிர­தேச செய­லக கிராம சேவை­யா­ளர் பிரி­வுக்­குட்ட விளை­யாட்­டுக் கழ­கங்­க­ளுக்கு இடை­யி­லான கால்­பந்­தாட்­டத் தொட­ரில் உடுத்­துறை பாரதி அணி இறு­திக்­குத் தகுதி பெற்­றது.

வத்­தி­ரா­யன் உத­ய­சூ­ரி­யன் விளை­யாட்­டுக் கழக மைதா­னத்­தில் அண்­மை­யில் இடம்­பெற்ற ஆண்­க­ளுக்­கான அரை­யி­றுதி ஆட்­டத்­தில் உடுத்­துறை பாரதி விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து உத­ய­சூ­ரி­யன் விளை­யாட்­டுக் கழக அணி மோதி­யது.

நிர்­ண­யிக்­கப் பட்ட நிமி­டங்­க­ளின் நிறை­வில் இரண்டு அணி­க­ளும் கோல் எதை­யும் பதி­வு­ செய்­யா­ததை அடுத்து ஆட்­டம் சம­நி­லை­யில் முடி­வ­டைந்­தது. சம­நி­லைத் தவிர்ப்பு உதை­க­ளில் வெற்­றி­யைத் தீர்­மா­னிக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. 4:3 என்ற கோல் கணக்­கில் பாரதி விளையாட்­டுக் கழக அணி வெற்­றி­பெற்­றது.

You might also like