மனித உரிமைகள் பிராந்திய அலுவலகம் இடமாற்றம்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்புப் பிராந்திய அலுவலகம் நேற்று முதல் மட்டக்களப்பு நகரப் பகுதிக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக அதன் இணைப்பாளர் ஏ.சி.அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவை நாடி வரும் மக்களின் போக்கு வரத்து உள்ளிட்ட வசதிகளின் நன்மை கருதி மட்டக்களப்பின் மையப் பகுதியான நகர மத்தியில் இந்த அலுவலகத்தை மாற்றும் முடிவை மேற்கொண்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த அலுவலகம் மட்டக்களப்பு கோவிந்தன் வீதியை அண்டிய இலக்கம் 46 இல் அமைந்துள்ள கட்டிடத்தில் இயங்க ஆரம்பித்துள்ளது.

You might also like