பார்சிலோனாவில்  பிலிப் கவுட்டினோ

லிவர்­பூல் அணிக்­காக விளை ­யா­டி­வந்த பிலிப் கவுட்­டி­னோவை இலங்கை மதிப்­பில் சுமார் 2 ஆயி­ரத்து 800 கோடி ரூபா கொடுத்து ஒப்­பந்­தம் செய்­துள்­ளது பார்­சி­லோனா.

நெய்­ம­ரின் வில­கலை அடுத்து அவ­ரின் இடத்­துக்கு பொருத்­த­மான வீரர் ஒரு­வ­ரைத் தேடி­வந்­தது பார்­சி­லோனா. லிவர்­பூல் அணி­யின் நட்­சத்­திர வீர­ரான கவுட்­டி­னோவை பார்­சி­லோனா ஒப்­பந்­தம் செய்­யத் திட்­ட­மி­டு­கி­றது என்று முன்­ன­தா­கவே தெரி­விக்­கப்­பட்­டது. இந்த நிலை­யில் இந்த ஒப்­பந்­தம் நேற்­று­முன்தினம் கைச்­சாத்­தா­கி­யுள்­ளது.

கடந்த இரு மாதங்­க­ளுக்கு முன்­னர், கவுட்­டி­னோவை விடு­விக்­கும் திட்­டம் துளி­யும் இல்லை என்று லிவர்­பூல் தெரி­வித்­தி­ருந்­தமை குறிப் பிடத்­தக்­கது. (ம)

You might also like