ஒப்பந்த நீடிப்பு இல்லை  பெய்லிஸ் திட்டவட்டம்

‘‘எதிர்வரும் 2019ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிலாந்து அணியின் தலைமைப் பயிற்சியாள ராகத் தொடர மாட்டேன்’’ என்று தெரிவித்தார் பெய்லிஸ்.
ஆஷஸ் தொடரில் 0:4 என்ற அடிப்படையில் படுதோல்வியடைந்து கிண்ணத்தைப் பறி கொடுத்தது இங்கிலாந்து. இதையடுத்துக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப் பிட்டார்.

‘‘என்னுடைய ஒப்பந்தம் 2019ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. அதன்பிறகு நான் வெளியேறுவேன். நான்கு வருடத்துக்குப் பிறகு மாற்றத்துக்கான நேரம் என்று நான் நினைக்கிறேன்.

புதிய பயிற்சியாளர் மற்றும் மாறுபட்ட அணுகுமுறை புதிய உத்வேகத்தை கொடுக்கும்’’ என பெய்லிஸ் மேலும் தெரிவித்தார்.

You might also like