இந்தியாவுக்கு எதிராக  தாக்குதல் தொடரும்

கிப்சன் நம்பிக்கை

‘‘இந்­திய அணிக்கு எதி­ரான தாக்­கு­தல் கள் தொட­ரும்’’ என்று நம்­பிக்கை தெரி­வித்­தார் தென்­னா­பி­ரிக்க அணி­யின் தலை­மைப் பயிற்­சி­யா­ளர் கிப்­சன்.

இந்­திய அணிக்கு எதி­ராக அண்­மை­யில் முடி­வுக்கு வந்த டெஸ்ட் ஆட்­டத்­தில் தென்­னா­பி­ரிக்க அணி வெற்­றி­பெற்­றது. அந்த அணி­யின் வேகப்­பந்து வீச்­சா­ளர்­கள் வெற்­றிக்கு முதன்­மைக் கார­ணி­யாக இருந்­த­னர். இதை­ய­டுத்­துக் கருத்­துத் தெரி­விக்­கை­யி­லேயே கிப்­சன் இவ்­வாறு தெரி­வித்­தார்.

‘‘வேகப்­பந்து வீச்­சா­ளர்­களை அதி­க­ மா­கப் பயன்­ப­டுத்த வேண்­டும் என்ற மன­நி­லை­யு­டன் செயற்­ப­டக்­கூ­டிய பயிற்­சி­யா­ளர் நான். 4 வேகப்­பந்து வீச்­சா­ளர்­க­ளு­டன் களம் இறங்­கும் போது அணி­யின் கலவை சரி­யாக இருக்­கி­றதா? என்­பதை முத­லில் பார்க்க வேண்­டும்.

எதிர்­வ­ரும் டெஸ்ட் ஆட்­டங்­க­ளுக்­கான சீதோஷ்ண நிலை­யும் 4 வேகப்­பந்து வீச்­சா­ளர்­க­ளுக்கு உகந்த வகை­யில் இருக்­கும் என்று எதிர்­பார்க்­கி­றோம். அது கைகூ­டா­விட்­டால் வேறு வழி­யைக் கையாள வேண்­டும்.

எது­வா­கி­லும் இந்­தத் தொடர் முழு­வ­தும் எப்­படி 4 வேகப்­பந்து வீச்­சா­ளர்­களை களத்துக்கு கொண்டு வரு­வது என்­ப­தைத்­தான் கவ­னத்­தில் கொள்­வோம்’’ என கிப்­சன் மேலும் தெரி­வித்­தார்.

You might also like