கோக்­லியே இலக்கு என்­கி­றார் பிளன்­டர்

இந்­திய அணி­யின் தலை­வர் கோக்­லி­தான் முக்­கிய இலக்கு என்று தெரி­வித்­தார் தென்­னா­பி­ரிக்க அணி­யின் வேகப்­பந்து வீச்­சா­ளர் பிளன்­டர்.

இந்த இரண்டு அணி­க­ளுக்­கும் இடை­யில் கேப்­ட­வு­னில் நடை­பெற்ற முத­லா­வது ஆட்டத்தில் தென்­னா­பி­ரிக்க அணி வெற்­றி­பெ­று­வ­தற்கு பிளன்­டர் முக்­கிய கார­ண­மா­கத் திகழ்ந்­தார்.

ஒட்­டு­மொத்­த­மாக அவர் 10 இலக்­கு­க­ளைக் கைப்­பற்றி வெற்­றிக்கு வித்­திட்­டார். இதை­ய­டுத்­துக் கருத்­துத் தெரி­விக்­கை­யி­லேயே பிளன்­டர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

‘‘விராட் கோக்லி மிக­வும் அரு­மை­யான வீரர். அவரை வீழ்த்­து­வ­து­தான் எங்­க­ளது இலக்­காக இருந்­தது. விராட் கோக்­லியை ஆரம்­பத்­தி­லேயே வீழ்த்­தி­விட்­டால் எங்­க­ளுக்கு வெற்றி எளிது என்று கணித்­தோம்.

அதன்­ப­டியே இரண்டு இன்­னிங்­சி­லும் அவரை விரை­வில் வீழ்த்­தி­னோம். அடுத்­த­டுத்த ஆட்­டங்­க­ளி­லும் கோக்­லியே முக்­கிய இலக்கு’ ’ என்று பிளன்­டர் மேலும் தெரி­வித்­தார்.

You might also like