இலங்கை அணி நேற்று அறிவிப்பு
இலங்கை – பங்களாதேஷ் – சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள முத்தரப்புத் தொடருக்கான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
எதிர்வரும் 15ஆம் திகதி இந்தத் தொடர் ஆரம்பமாகவுள்ளது. இந்தத் தொடரில் மத்தியூஸ் தலை வராகச் செயற்படுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தொடருக்கான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணி விவரம் – மத்தியூஸ் (தலைவர்), தரங்க, தனுஸ்க குணதிலக, குசல் மென்டிஸ், சந்திமல், குசல் ஜெனித் பெரேரா, திசர பெரேரா, அசல குணரத்ன, நிரோசன் டிக்வெல்ல, சுரங்க லக்மல், நுவன் பிரதீப், துஸ்மன்த சமீர, செஹான் மதுசங்க, அகில தனஞ்சய, லக்சன் சந்தகன், வனிது ஹசரங்க டி சில்வா.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் காயமடைந்திருந்த தனஞ்சய டி சில்வா, காயத்தில் இருந்து முழுமையாக விடுதலை பெறாததை அடுத்து அவர் அணியில் இடம்பெறவில்லை.