பேஸ்புக் மூலம் இளம்பெண் செய்த காரியம்! – இளைஞர்களே உசார்!!

முகப்புத்தகம் மற்றும் திருமண இணையதளம் மூலம் பல ஆண்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் பறித்த இளம் பெண்ணொருவர் இந்தியாவின் சென்னை நகரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையை சேர்ந்த பாலமுருகன் என்ற மென்பொருள் பொறியாளருக்கு ஸ்ருதி என்ற பெண்ணுக்கும் இடையே திருமண இணையதளமான மேட்ரிமோனியலில் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். முகப்புத்தகத்திலும் பழகி வந்துள்ளனர்.

திடீரென தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என கூறி பாலமுருகனிடம் 45 லட்சம் ரூபாவை (இந்திய நாணயமதிப்பு) ஸ்ருதி பெற்றுள்ளார்.

எதிர்கால மனைவிதானே என்ற எண்ணத்தில் பாலமுருகனும் பணத்தை வழங்கியுள்ளார். பணம் வழங்கியதும் ஸ்ருதியை தொடர்புகொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாலமுருகன், கோவை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

தீவிரமாக விசாரணை நடத்திய பொலிஸார் பி.என்.பாளையத்தை சேர்ந்த ஸ்ருதி, அவரது தாய் மற்றும் சகோதரர் என மூவரைக் கைது செய்துள்ளனர்.

ஸ்ருதி, பாலமுருகனை மட்டுமின்றி முகப்புத்தகம் மற்றும் மேட்ரிமோனியல் இணையதளத்தின் மூலம் பழகி, பல ஆண்களிடம் பல கோடி ரூபா பணம் பறித்தமை விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

You might also like