அரச தலைவர் பதவியில்- 2021 வரை மைத்திரி தொடரலாம்!!

சட்டமா அதிபர் உயர்நீதிமன்றில் அறிவிப்பு

தற்­போது பத­வி­யி­லி­ருக்­கும் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆறு ஆண்­டு­க­ளுக்கு அரச தலை­வ­ரா­கப் பதவி வகிக்­க­லாம் என்று சட்­டமா அதி­பர் ஜயந்த உயர்­நீ­தி­மன்­றத்­தில் நேற்று அறி­வித்­தார்.

2015ஆம் ஆண்டு ஜன­வரி 8ஆம் திகதி தெரி­வு­செய்­யப்­பட்டு ஜன­வரி 9ஆம் திக­தி­யன்று பத­வி­யேற்­றுக்­கொண்ட அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, ஆறு ஆண்­டு­கள் பத­வி­யேற்­ப­தற்கே மக்­க­ளால் தெரி­வு­செய்­யப்­பட்­டார் என்று குறிப்­பிட்­டார்.

நான்கு மாதங்­க­ளின் பின்­னர் கொண்­டு­வ­ரப்­பட்ட 19ஆம் திருத்­தத்­துக்­க­மைய அவ­ரு­டைய பத­விக்­கா­லம் குறைக்­கப்ப­ டாது என்­றும் ஆறு ஆண்­டு­கள் அரச தலை­வ­ரா­கப் பதவி வகிக்­க­லாம் என்­றும் அறி­வித்­தார்.

அர­ச­மைப்­பின் 19ஆம் திருத்­தத்துக் கமைய 2020ஆம் ஆண்டு
தனது பத­விக்­கா­லம் நிறை­வ­டை­ய­வுள்ள நிலை­யில், 2021ஆம் ஆண்டு வரை­தான் அரச தலை­வ­ரா­கப் பத­வி­வ­கிக்க முடி­யுமா என்­பது தொடர்­பான வியாக்­கி­யா­னத்தை எதிர்­வ­ரும் 14ஆம் திக­திக்­குள் தனக்கு அறி­விக்க வேண்­டும் என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன உயர்­ நீ­தி­மன்­றத்­தி­டம் கோரி­யி­ருந்­தார்.

இது தொடர்­பில் ஆராய்­வ­தற்­கான உயர்­நீ­தி­மன்ற அமர்வு, தலைமை நீதி­ய­ர­சர் பிரி­ய­சாத் டெப், நீதி­ய­ர­சர்­க­ளான ஈவா வன­சுந்­தர, புவ­னேஹ அலு­வி­ஹார, சிசிர டி அப், கே.ரி.சித்­தி­ர­சிறி ஆகி­யோ­ரைக் கொண்ட ஐவ­ர­டங்­கிய நீதி­ய­ர­சர்­கள் குழாம் முன்­னி­லை­யில் நேற்­றுக் கூடி­யது.

தனது தொகுப்­பு­ரையை ஆற்­றுப்­ப­டுத்­திய சட்­டமா அதி­பர், மக்­க­ளின் முடிவை சட்­ட­மி­யற்­றும் கட்­ட­மைப்­பால் மக்­க­ளின் அனு­ம­தி­யின்றி மாற்­ற­மு­டி­யாது என்­றும் அறி­வித்­தார்.

அர­ச­மைப்­பின் 19ஆம் திருத்­தத்­தைக் கொண்­டு­வ­ரு­வ­தற்கு முன்­னரே தான் ஆறு ஆண்­டு­கள் அரச தலை­வ­ரா­கப் பத­வி­வ­கிக்க முடி­யுமா என்­பது தொடர்­பான வியாக்­கி­யா­னத்தை அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன உயர் ­நீ­தி­மன்­றத்­தி­டம் ஏன் கோர­வில்லை என்று இடை­யீட்­டா­ளர்­க­ளில் ஒரு­வ­ரான முன்­னாள் அமைச்­சர் ஜி.எல்.பீரிஸ் சார்­பில் முன்­னி­லை­யா­கி­யி­ருந்த அரச தலை­வர் சட்­டத்­த­ரணி மனோ­ஹர டி சில்வா கேள்­வியை எழுப்­பி­னார்.

பத­விக் காலத்தை நீடிக்க முடி­யாது

அவ்­வா­றான சந்­தே­கம் ஏற்­பட்­டி­ருக்­கு­மா­யின் 2015ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி அர­ச­மைப்­பின் 19ஆம் திருத்­தத்­தைக் கொண்­டு­வ­ரு­வ­தற்கு முன்­னர் 6 ஆண்­டு­கள் பத­வி­யி­லி­ருப்­ப­தற்­காக பத­வி­யேற்­றுக்­கொண்ட அரச தலை­வர் அர­ச­மைப்­பின் 120ஆம் உறுப்­பு­ரைக்­க­மைய உயர்­நீ­தி­மன்­றத்தை நாடி­யி­ருக்­க­லாம் என்­றும் தெரி­வித்­த­து­டன், அரச தலை­வ­ரின் பத­விக்­கா­லத்தை நீடிக்க முடி­யாது என்­றும் தெரி­வித்­தார்.

இடை­யீட்­டா­ளர்­க­ளான சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் பொதுச் செய­லர் துமிந்த திசா­நா­யக்க சார்­பில் முன்­னி­லை­யான அரச தலை­வர் சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா, உலப்­பனே சுமங்­கல தேரர் சார்­பில் முன்­னி­லை­யா­கி­யி­ருந்த அரச தலை­வர் சட்­டத்­த­ரணி சாலிய பீரிஸ் ஆகி­யோர் அரச தலை­வர் ஆறு ஆண்­டு­கள் பதவி வகிக்­க­லாம் என்று சட்­டமா அதி­ப­ரின் கருத்­தை­யொத்த விட­யத்­தையே முன்­வைத்­த­னர்.

4 ஆண்­டு­களே பதவி வகிக்­க­லாம்

லங்கா சம­ச­மா­ஜக் கட்­சி­யின் தலை­வர் திஸ்­ஸ­வி­தா­ரண சார்­பில் முன்­னி­லை­யா­க­யி­ருந்த அரச தலை­வர் சட்­டத்­த­ரணி அலி சாப்ரி, கலா­நிதி குண­தாஸ அம­ர­சே­கர சார்­பில் முன்­னி­லை­யா­கி­யி­ருந்த கல்­யா­ன­நடே திர­ண­கம ஆகி­யோர் 4 ஆண்­டு­க­ளுக்கே பத­வி­வ­கிக்க ஆசைப்­பட்­டி­ருந்­தார் என்­றும் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்த கருத்தை சுட்­டிக்­காட்­டி­ய­து­டன், ஆறு ஆண்­டு­க­ளுக்­குப் பதவி வகிக்­க­மு­டி­யாது என்று அறி­வித்­த­னர்.

திருத்­தங்­கள் அல்­லது சட்­டங்­கள் இயற்­றப்­பட்­ட­தன் பின்­னர் வியாக்­கி­யா­னத்­தைக் கோரு­வ­தால் முன்­னாள் அரச தலை­வர்­க­ளான சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க, மகிந்த ராஜ­பக்ச ஆகி­யோ­ரும் ஏனை­யோ­ரும் தமக்கு சார்­பான விடங்­க­ளைக் கோரக்­கூ­டும் என்று அரச தலை­வர் சட்­டத்­த­ரணி அலி சாப்ரி தெரி­வித்­தார்.

சட்­டத்­துக்கு முரண்

தேசிய சுதந்­திர முன்­ன­ணி­யின் தலை­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான விமல் வீர­வன்ஸ சார்­பில் முன்­னி­லை­யா­கி­யி­ருந்த அரச தலை­வர் சட்­டத்­த­ரணி சவேந்­திர பெர்­னாண்டோ, நீதி­யா­ன­தும் சுதந்­தி­ர­மா­ன­து­மான தேர்­த­லுக்­கான மக்­கள் இயக்­கத்­தின் நிறை­வேற்­றுப் பணிப்­பா­ளர் கீர்த்தி தென்­ன­கோன் சார்­பில் முன்­னி­லை­யா­கி­யி­ருந்த சட்­டத்­த­ரணி கிரி­ச­மால் வீர­சூ­ரிய, மாற்­றுக் கொள்­கை­க­ளுக்­கான மத்­திய நிலை­யத்­தின் சட்­டத்­த­ரணி விரான் கொரின் ஆகி­யோர் ஐந்து ஆண்­டு­களே பதவி வகிக்­க­மு­டி­யும் என்­றும் ஆறு ஆண்­டு­கள் பதவி வகிப்­பது சட்­டத்­துக்கு முர­ணா­னது என்­றும் தமது வாதங்­களை முன்­வைத்­த­னர்.

தொகுப்­பு­ரை­களை முன்­வைத்த இடை­யீட்­டா­ளர்­க­ளின் எழுத்­து ­மூல தொகுப்­பு­ரை­களை இன்று நண்­ப­கல் 12 மணிக்­குள் சமர்ப்­பிக்­கப்­ப­டும் என்­றும் அரச தலை­வர் கோரிய வியாக்­கி­யா­னம் தொடர்­பில் அவ­ருக்கு அறி­விக்­கப்­ப­டும் என்­றும் நீதி­ய­ர­சர்­கள் குழாம் அறி­வித்­தது.

You might also like