பெயரளவில் மாத்திரமே தேர்தலில் பெண்கள் – கபே அமைப்பு

வடக்கு மாகா­ணத்­தில் பல இடங்­க­ளில் பெய­ர­ள­வில் மாத்­தி­ரம் பெண்­க­ளின் பெயர்­கள் வேட்­பு­ம­னு­வில் குறிப்­பி­டப்ப ட்டுள்­ளன என்று கபே அமைப்­பின் தேசிய அமைப்­பா­ளர் அக­மட் மனாஸ் குற்­றம் சுமத்­தி­யுள்­ளார்.

வவு­னி­யா­வில் நேற்று நடத்­தப்­பட்ட செய்­தி­யா­ளர்­கள் சந்­திப்­பி­லேயே அவர் இவ்­வாறு கூறி­னார். அவர் தெரி­வித்­த­தா­வது–

வட மாகா­ணத்­தில் பல இடங்­க­ளில் பெய­ர­ள­வில் மாத்­தி­ரம் பெண்­க­ளின் பெயர்­கள் வேட்­பு­ம­னு­வில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள நிலை­யில் அவர்­கள் வட்­டார ரீதி­யில் வெற்றி பெற்­றா­லும் சரி, பெறா­விட்­டா­லும் சரி என்ற மனோ­பா­வத்­து­டன் தேர்­தல் பரப்­புரை வேலைத்­திட்­டத்­தினை ஆண்­கள் முன்­னெ­டுத்து வரு­வதை அவ­தா­னிக்க முடி­கின்­றது.

வட்­டார ரீதி­யில் பெண்­கள் தெரிவு செய்­யப்­ப­டா­மல், கட்­சி­கள் மற்­றும் சுயேச்­சைக் குழுக்­க­ளில் ஆண்­கள் மாத்­தி­ரம் வெற்­றி­பெற்­றால் மேல­திக பெயர்ப்­பட்­டி­ய­லில் இருந்து பெண்­க­ளின் பெயர்­களை மாத்­தி­ரமே தெரி­வு­செய்து அனுப்­பக் கூடிய சந்­தர்ப்­பத்­தில் கட்­சிச் செய­ல­ருக்கு பெரிய பின்­ன­டை­வைச் சந்­திக்க வேண்­டிய நிலை ஏற்­ப­டும்.

கட்­சி­கள் மற்­றும் சுயேச்­சைக் குழுக்­க­ளில் பெண்­கள் போட்­டி­யி­டும் வட்­டா­ரங்­க­ளில் கூடு­தல் கவ­னம் செலுத்தி அவர்­கள் வெற்றி பெறு­வ­தற்­கான ஆலோ­ச­னை­க­ளை­யும் அவ­தா­னத்­தை­யும் வழங்க வேண்­டும். சில வேட்­பா­ளர்­க­ளும், கட்­சி­க­ளும் இன­ரீ­தி­யி­லான பரப்­பு­ரை­களை முன்­னெ­டுப்­ப­தனை அவ­தா­னிக்க முடி­கின்­றது.

சில கட்­சி­க­ளின் பெயர்­கள் இனத்தை அடை­யா­ளப்­ப­டுத்­தும் பெயர்­க­ளில் காணப்­பட்­டா­லும் அவர்­கள் குறிப்­பாக அந்த இனத்­துக்­குத்­தான் வாக்­கு­களை வழங்­க­வேண்­டும் வேறு இனத்­த­வர்­கள் பரப்­பு­ரை­க­ளில் ஈடு­பட முடி­யாது என்­கின்ற செயற்­பா­டு­க­ளில் ஈடு­ப­டு­கின்­ற­னர்.

இன­ரீ­தி­யா­கவோ, பிர­தே­ச­வா­தத்­தைத் தூண்­டும் வகை­யிலோ பரப்­பு­ரை­க­ளில் ஈடு­ப­டு­வதை கபே அமைப்பு வன்­மை­யாக கண்­டிக்­கின்­றது. இவ்­வா­றான நிலைப்­பாட்டை நாம் எமது கண்­கா­ணிப்­பா­ளர்­கள் அதி­க­ள­வா­னோரை வட மாகா­ணத்­தில் நிறு­விக் கண்­கா­ணிப்­போம் – என்­றார்.

You might also like