பரப்­பு­ரைக்கு ஆலய வளா­கத்தை வழங்­கு­வது தேர்­தல் விதி­மீ­றலே!!

மல்­லா­கம் நீதி­மன்று சுட்­டிக்­காட்டு

தமிழ் தேசி­யப் பேரவை வேட்­பா­ளர்­கள் சில­ரின் தேர்­தல் பரப்­பு­ரைக் கூட்­டத்தை நடத்த மாவிட்­ட­பு­ரம் கந்­த­சு­வாமி ஆலய வளா­கத்தை வழங்­கி­யமை தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வின் விதி­மு­றை­களை மீறும் செயற்­பாடு என அந்த ஆல­யத்­தின் குருக்­க­ளுக்கு மல்­லா­கம் நீதி­மன்­றால் எடுத்­து­ரைக்­கப்­பட்­டது.

ஆல­யத்­தில் அண்­மை­யில் கட்சி ஒன்­றின் தேர்­தல் அறிக்கை வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது என்று தெரி­விக் கப்­ப­டு­கின்­றது. அது தொடர்­பாக அந்த ஆல­யத்­தின் குருக்­கள் மல்­லா­கம் நீதி­மன்­றுக்கு நேற்று அழைக்­கப்­பட்­டார்.

விதி­மீ­றல் தொடர்­பில் அவ­தா­ன­மாக இருக்க வேண்­டும் என்று அவர் அறி­வு­றுத்­தப்­பட்டு விடு­தலை செய்­யப்­பட்­டார் என்று அவர் சார்­பில் மன்­றில் முற்­பட்ட சட்­டத்­த­ர­ணி­க­ளால் கூறப்­பட்­டது.

You might also like