மைத்திரியின் பதவிக்காலம் – குழப்பம் தீர்க்கவே விளக்கம்!!

அரச தலை­வ­ரின் பத­விக் காலம் தொடர்­பில் ஏற்­பட்ட குழப்­பத்தைத் தீர்த்­துக் கொள்­ளும் நோக்­கு­ட­னேயே உயர் நீதி­மன்­றத்­தி­டம் விளக்­கம் கோரப்­பட்­டது என்று அரச தலை­வர் செய­ல­கம் நேற்று மாலை வெளி­யிட்ட செய்­திக் குறிப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அர­ச­மைப்­பின் 19ஆவது திருத்­தச் சட்­டத்­துக்கு ஏற்ப தற்­போ­தைய அரச தலை­வ­ரின் பத­விக்­கா­லம் தொடர்­பான இரு வேறு வகை­யான கருத்­துக்­கள் சட்­டம் சிவில் மற்­றும் அர­சி­யல் துறை­க­ளில் நில­வு­கின்­றன. அத­னால் ஏற்­ப­டக்­கூ­டிய குழப்­பத்தை தவிர்த்­துக்­கொள்­ளும் நோக்­கு­டன் அரச தலை­வர் தமது பத­விக்­கா­லம் தொடர்­பாக உயர்­நீ­தி­மன்­றத்­தி­டம் விளக்­கம் கோரி­யுள்­ளார்.

அர­ச­மைப்­பில் அரச தலை­வர் ஒரு­வ­ருக்கு அவ்­வாறு விளக்­கம் கோரு­வ­தற்­கான அதி­கா­ரம் காணப்­ப­டு­கின்­றது. முன்­னர் பத­வி­வ­கித்த அரச தலை­வர்­க­ளும் தமது பத­விக்­கா­லம் தொடர்­பாக இவ்­வாறு உயர்­நீ­தி­மன்­றத்­தி­டம் விளக்­கம் கோரி­யுள்­ள­னர் என்று அதில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

You might also like