முல்­லைத்­தீ­வில் கூ. சங்­கங்­க­ளுக்கு வறட்சி நிவா­ரண நிதி வந்­து­சே­ர­வில்லை!!

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் நான்­காம்­கட்ட வறட்சி நிவா­ரணத்துக் கான நிதி இன்­ன­மும் பல நோக்கு கூட்­டு­ற­வுச் சங்­கங்­க­ளுக்கு வந்­து­சே­ர­வில்லை எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.  இது­தொ­டர்­பில் தெரி­ய­வ­ரு­வ­தா­வது:

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் அனைத்­துப் பிர­தேச செய­லா­ளர் பிரி­வு­க­ளி ­லும் நான்­காம் கட்ட வறட்சி நிவா­ரணத்துக் கான இலகு வேலை­கள் முடி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளன.

பிர­தேச செய­லா­ளர்­க­ளின் பணிப்­புக்­க­மைய அந்­தந்த பிரிவு ப.நோ.கூ சங்­கத்­தி­னர் நிவா­ர­ணப் பொருள்­களை கட­னா­கப் பெற்­றி­ருந்­தன.

இருந்­த ­போ­தி­லும் இதற்­கான பணத்தை பிர­தேச செய­ல­கங்­கள் இன்­ன­மும் வழங்­க­வில்லை. சங்­கங்­க­ளின் பொது முகா­மை­யா­ளர்­கள் நாளாந்­தம் பிர­தேச செய­ல­கங்­க­ளுக்­குச் சென்று ஏமாற்­றத்­து­டனே திரும்­பு­கின்­ற­னர்.

இது­கு­றித்து அதி­காரி ஒரு­வர் தெரி­வித்­த­தா­வது:
முல்­லைத்­தீவு மாவட்­டத்­துக்கு நான்­காம்­கட்ட வறட்சி நிவா­ரணத்துக் கான 63 மில்­லி­யன் ரூபா பணம் இன்­று­வரை அர­சால் அனுப்­பி­வைக்­கப்­ப­ட­வில்லை. இது கிடைத்­த­வு­டன் ப.நோ.கூ சங்­கங்­க­ளுக்­கான பணம் வழங்­கப்­ப­டும்–என்­றார்.

You might also like