பேருந்து நிலை­யம் மாறி­ய­தால் நட­மா­டும் வியா­பா­ரி­கள் பாதிப்பு!!

வவு­னியா புதிய பேருந்து நிலை­யத்­தில் சேவை­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டதை அடுத்து, பழைய பேருந்து நிலை­யத்­தில் வியா­பா­ரம் செய்­து­ வந்­த­வர்­கள் பாதிப்­ப­டைந்­துள்­ள­னர். குறிப்­பாக நட­மா­டும் வியா­பா­ரி­கள் இத­னால் பெரி­தும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

புதிய பேருந்து நிலை­யம் தேசிய போக்­கு­வ­ரத்து ஆணைக்­கு­ழு­வின் கட்­டுப்­பாட்­டில் உள்­ள­தால் அங்கு சென்று வியா­பா­ரம் செய்­வ­துக்குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

இது­தொ­டர்­பாக கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை சங்க உறுப்­பி­னர்­கள் ஒன்­றி­ணைந்து மாற்­று­வழி தொடர்­பாக கலந்­து­ரை­யா­டல் ஒன்றை மேற்­கொண்­ட­னர்.

எனி­னும், தேசிய போக்­கு­வ­ரத்து ஆணைக்­கு­ழு­வின் பணிப்­பா­ளர் வெளி­நாடு சென்­றுள்­ள­தால் தீர்வு கிடைக்­க­வில்லை. அவர் 15ஆம் திகதி நாடு திரும்­பி­ய­தும் நிலை­மை­க­ளைத் தெரி­விப்­ப­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர் என்று நட­மா­டும் வியா­ப­ரி­கள் சக வாழ்­வுச் சங்­கத்­தி­னர் தெரி­வித்­துள்­ள­னர்.

பழைய பேருந்து நிலையத்தில் 33பேர் நட­மா­டும் வியா­பா­ரத்­தில் ஈடு­பட்­டுள்­ள­னர். கடந்த முத­லாம் திக­தி­யி­லி­ருந்து பேருந்து நிலை­யம் மாற்­றப்­பட்­டுள்­ள­தால் வியா­பா­ரத்தை மேற்­கொள்ள முடி­யாமல் நாம் திண்­டா­டு­கின்­றோம்.

எமது ஜீவ­னோ­பா­யத்தை தேடிக்­கொள்ள முடி­யா­மல் பெரி­தும் கஸ்­ரப்­பட்டு வரு­கின்­றோம். எமது குடும்­பங்­க­ளின் நிலை­க­ருதி அதி­கா­ரி­கள் மாற்­று­வழி ஒன்றை ஏற்­ப­டுத்­தித்­த­ர­வேண்­டும் – என்று அவர்­கள் கோரிக்கை விடுக்­கின்­ற­ னர்.

You might also like