பொருத்தமற்ற இடங்களில் சாலை சமிக்ஞை விளக்கு!!
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையினால் அக்கராயன் பிரதேசத்தில் பொருத்தப்படும் சாலை மின் விளக்குகள் பொருத்தமற்ற இடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:
நேற்று முன்தினம் புதன் கிழமை முதல் அக்கராயன் பிரதேசத்தில் பல இடங்களில் சூரியசக்தி சாலை விளக்குகள் பொருத்தப்பட்டு வருகிறன. ஆனால், அவை ஏற்கனவே எழுத்துமூலம் வழங்கப்பட்ட முன்மொழிவுகளுக்கு மாறாக பொருத்தமற்ற இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.
தனிப்பட்ட சில நபர்களின் செல்வாக்கின் அடிப்படையிலேயே இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்களுக்கோ, பொதுப் பயன்பாட்டுக்கோ பெரிய நன்மைகள் எவையும் ஏற்படப் போவதில்லை.
எனவே, கரைச்சி பிரதேச சபையானது பிரதேச பொது அமைப்புகள் வழங்கியுள்ள முன்மொழிவுகளுக்கு அமைய சாலை விளக்குகளைப் பொருத்தவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்ப ட்டுள்ளது.