புதிய கட்­ட­டத் தொகுதி அமைப்­ப­தில் ஏற்­பட்ட பிரச்­சினை முடி­வுக்கு வந்­தது!!

இந்­திய அர­சின் நிதி­யு­த­வி யு­டன் வள­லாய் அமெ­ரிக்­கன் மிசன் தமிழ்க் கல­வன் பாட­சா­லை­யில் அமைக்­கப்­ப­ட­வி­ருந்த புதிய கட்­ட­டத் தொகுதி அமைப்­ப­தில் ஏற்­பட்ட பிரச்­சினை மனித உரிமை ஆணைக்­கு­ழு­வில் வைத்து நேற்­றை­ய­தி­னம் இரண்டு தரப்­புக்­க­ளும் சமா­தா­ன­மாக போகின்­றோம் எனக் கூறி­ய­ தை­ய­டுத்து முடி­வு­றுத்­தப்­பட்­டது.

மீள்­கு­டி­யேற்றக் கிரா­ம­ மா­கிய வள­லாய் கிராமத்தின் குறித்த பாட­சா­லைக்கு இந்­திய அர­சின் 7.4 மில்­லி­யன் ரூபாய் நிதி ஒதுக்­கீட்­டில் கட்­ட­டம் அமைக்க உத­வித்­திட்­டம் வழங்­கப்­பட்­டது. அந்­தத் திட்­டத்­தில் முன்­மொ­ழி­யப்­பட்­டி­ருந்த அள­வுத்­திட்­டத்­தில் கட்­ட­டத்தை அமைத்­தால் பாட­சா­லைக் காணி­யில் உள்ள பௌதீக வளங்­கள் பாதிப்­ப­டை­யும் எனக் கூறி வடக்கு மாகாண கல்வி அமைச்­சின் செய­லா­ளர், வடக்கு மாகா­ணக் கல்வி அமைச்­சின் பாட­சா­லை­கள் வேலை­கள் பகு­திக்­கான பொறி­யி­ய­லா­ளர், யாழ்ப்­பாண வல­யக் கல்­விப் பணிப்­பா­ளர், வல­யத் திட்­ட­மி­டல் பணிப்­பா­ளர் ஆகி­யோ­ருக்கு எதி­ராக பாட­ சாலை மாண­வர்­க­ளின் பெற்­றோர்­க­ளா­லும் பழைய மாண­வர்­க­ளா­லும் மனித உரிமை ஆணைக்­கு­ழு­வில் கடந்த நவம்­பர் மாதம் முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­டது.

அந்த முறைப்­பாட்­டில் சரி­யான முறை­யில் திட்­ட­ மி­டப்­ப­டாமை, பாட­சா­லை­யின் எதிர்­கால வளர்ச்­சி­யைக் கருத்­தில் கொள்­ளாது திட்­ட­மிட்­டமை, திட்­ட­மி­ட­லின் போது காணி­யின் வரை­ப­டம் இல்­லாமல் திட்­ட­ மிட்­டமை போன்ற குற்­ற ச்­சாட்­டுக்­கள் மு ன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

இந்­த­நி­லை­யில் நேற்­றை­ய­தி­னம் மனித உரிமை ஆணைக்­கு­ழு­வில் விசா­ரணைக்கு எடுக்கப் பட்டது.அதன்­போதே முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது.

You might also like