நாட்­டின் வர­லாற்­றில் முக்­கி­ய­மான உள்­ளூ­ராட்­சி தேர்­தல்!!

நாட்­டின் வர­லாற்­றில் அடுத்த மாதம் 10 ஆம் திகதி இடம் பெறவுள்ள உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் முக்­கி­ யத்­து­வம் வாய்ந்­த­தொன்­றா­கக் கரு­தப்­ப­டு­கின்­றது. இந்­தத் தேர்­தல் நாடு முழு­வ­தும் ஒரே திக­தி­யில் இடம்­பெ­ற­வி­ருப்­ப­தால் தேசிய முக்­கி­யத்­து­வம் வாய்ந்­த­தா­க­வும் மாறி­விட்­டது.

தென்­ப­கு­தி­யைப் பொறுத்­த­வ­ரை­யில் முக்­கி­ய­ மான அர­சி­யல்­வா­தி­கள் சில­ரின் தலை­வி­தியை மாற்­றப்­போ­கின்ற ஒன்­றா­க­வும் இந்­தத் தேர்­தல் அமை­யப்­போ­கின்­றது. மகிந்த ராஜ­பக்ச இன்­ன­மும் ஆட்­சிக் கன­வு­ட­னேயே அர­சி­ய­லில் ஈடு­பட்டு வரு­கின்­றார்.

அரச தலை­வ­ருக்­கான தேர்­த­லும் இவ­ரைக்­கை­விட்டு விட்­ட­தால், இந்­தக் குட்­டித் தேர்­தல் மூல­மா­வது தமது கன­வைப் பூர்த்தி செய்து கொள்­ள­லா­மென அவர் நம்­பிக் கொண்­டி­ருக்­கின்­றார்.
உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் தமது அணி வெற்றி பெற்­று­விட்­டால், தற்­போ­தைய ஆட்சி கலைக்­கப்­பட்­டு­வி­டும், பின்­னர் தமது சார்­பான அர­சொன்றை அமைத்து விட­லா­மென அவர் நம்­பு­கின்­றார். அதற்­கேற்­ற­வ­கை­யில் காய்­க­ளை­யும் நகர்த்தி வரு­கின்­றார்.

அர­சுக்­குத் தலை­வ­லி­யாக அமைந்த
பிணை­முறி ஊழல் விவ­கா­ரம்

பிணை­முறி மோசடி விவ­கா­ரம் அர­சுக்­குள் பெரும் சல­ச­லப்பை ஏற்­ப­டுத்­தி­விட்­டது. தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி।­ர­ம­சிங்­க­வும் இதில் சம்­பந்­தப்­பட்­டி­ருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­வ­தால் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யி­னர் கொந்­த­ளித்த நிலை­யில் காணப்­ப­டு­கின்­ற­னர்.

ஏற்­க­னவே முக்­கிய அமைச்­சுப் பொறுப்­புக்­களை வகித்­து­வந்த ரவி கரு­ண­நா­யக்க, பதவி வில­கி­யமை ஐ.தே.க வின­ரைச் சீற்­ற­மு­றச் செய்து விட்­டது. விசா­ரணை மேற்­கொண்ட ஆணைக்­கு­ழு­வின் அறிக்­கை­யில் போலி­யான தக­வல்­கள் காணப்­ப­டு­வ­தாக ரவி கரு­ண­நா­யக்க தற்­போது கூறியுள்­ளமை இங்கு குறிப்­பி­டத்­தக்­கது.

விசா­ரணை அறிக்­கை­யில் தவ­று­கள் இருப்­ப­தால், நீதி­மன்­றத்தை நாடப்­போ­வ­தா­கச் சிலர் கூறி­யி­ருந்­த­தை­யும் நாம் கவ­னத்­தில் கொள்ள வேண்­டும்.

சுதந்­தி­ரக் கட்சி மற்­றும் ஐ.தே.க. தரப்­பி­னர்­கள் மத்­தி­யில் கருத்து முரண்­பா­டு­கள்

பிணை­முறி மோசடி தொடர்­பாக அரச தலை­வர் உறு­தி­யான நட­வ­டிக்­கை­களை எடுத்­தால் அர­சுக்­குள் பிளவு ஏற்­பட்டு விடுெ­மன்­பதை நம்­ப­லாம். கூட்­டாட்சி, நல்­லாட்சி என்­றெல்­லாம் கூறப்­ப­டு ­கின்ற போதிலும், சிறீ­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யின­ ரும், ஐ.தே.க வின­ரும் ஒரு­வ­ரை­யொ­ரு­வர் எதி­ரி­க­ளா­கவே கரு­திச் செயற்­ப­டு­கின்­ற­னர்.

தலைமை அமைச்­சர் பொறுப்­பி­லி­ருந்து ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை நீக்­கி­விட்­டுத் தமது கட்­சி­யைச் சேர்ந்த ஒரு­வரை அந்­தப் பத­வி­யில் நிய­மிப்­ப­ தையே சிறீ­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யி­னர் விரும்­பு­கின்­ற­னர். ஆனால் ஐ.தே.க வினர் அதை அறவே எதிர்க்­கின்­ற­னர்.

மற்­றொரு புறம் தலைமை அமைச்­சர் பதவி மீது ஒரு கண்­வைத்­த­வாறு மகிந்த ராஜ­பக்ச காத்­தி­ருக்­கின்­றார். எவ்­வா­றா­யி­னும் உயர்ந்த பத­வி­யொன்­றைப்­பி­டிப்­பதே அவ­ரது நோக்­க­மாக உள்­ளது.

இதற்­காக எதை­யும் செய்­வ­தற்­கும், கூறு­வ­தற்­கும் அவர் தயா­ரா­கவே உள்­ளார். இடம்­பெ­றப்­போ­கும் தேர்­தல் தமி­ழீ­ழமா? அல்­லது ஒற்­றை­யாட்­சியா? என்­ப­தைத் தீர்­மா­னிக்­கப் போவ­தாக அவர் தேர்­தல் பரப்­பு­ரைக் கூட்­ட­மொன்­றில் தெரி­வித்­தி­ருக்­கி­றார். இத்­த­கைய கருத்­துக்­கள் அப்­பாவி மக்­க­ளி­டையே இன­வா­தத்­தை­யும், குரோ­தத்­தை­யும் ஏற்­ப­டுத்­தி­வி­டு­மென்­பதை அவர் ஏனோ மறந்­து­விட்­டார்.

தமி­ழர் பிர­தே­சங்­க­ளில் சூடு­பி­டிக்­கும்
உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் பரப்­பு­ரை­கள்

தமி­ழர் பிர­தே­சங்­க­ளில் உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் தொடர்­பான பரப்­பு­ரை­கள் சூடு­பி­டிக்க ஆரம்­பித்­து­விட்­டன. வேட்­பா­ளர் ஒரு­வர் தாக்­கப்­பட்ட சம்­ப­வ­மும், வேறொரு வேட்­பா­ள­ருக்கு அச்­சு­றுத்­தல் விடுக்­கப்­பட்ட சம்­ப­வ­மொன்­றும் இது­வரை பதி­வா­கி­யுள்­ளன.

மற்­றொரு வேட்­பா­ள­ரின் வீட்­டுக்கு கழிவு ஒயில் ஊற்­றப்­பட்­டமை முத­லா­வது தேர்­தல் வன்­மு­றை­யா­கப் பதி­வா­கி­யி­ருந்­தது. தேர்­தல் திகதி நெருங்­கும் பொழுது வன்­மு­றைச் சம்­ப­வங்­கள் மேலும் அதி­க­ரித்­துச் செல்­வ­தற்­கான வாய்ப்­புகளுக்கும் உள்­ளன.

வடக்­கின் சில உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கு எதி­ர­ணி­யி­னர் செல்­வாக்­கு­மிக்க வேட்­பா­ளர்­களை நிறுத்­தி­யுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­வ­தால், கூட்­ட­மைப்­பி­ னர் தமது பரப்­பு­ரை­க­ளைத் தீவி­ர­மாக மேற்­கொள்­ள­வேண்­டிய தேவை எழுந்­துள்­ளது.

கூட்­ட­ மைப்­பின் தலை­வர்­கள் இப்­போதே வெற்­றிக்­க­ளிப்­பில் மிதப்­பதை விடுத்து, தேர்­த­லில் வெற்றி பெறு­வ­தற்­கான முன் முயற்­சி­க­ளில் தீவி­ர­மாக ஈடு­பட வேண்­டும். இல்­லை­யேல் எதிர்­ம­றை­யான விளை­வு­க­ளை­யும் சந்­திக்க நேரி­ட­லாம்.

தேர்­தல் ஆணைக்­கு­ழு­வின் தலை­வர் நேர்­மை­யா­ன­தும், விதி­க­ளுக்கு உட்­பட்­ட­து­மான தேர்­தலை நடத்தி முடிப்­ப­தில் தீவிர கவ­னம் செலுத்தி வரு­கின்­றார். ஒரு நேர்­மை­யும் திற­மை­யும்­மிக்க உத்­தி­யோ­கத்­த­ரான அவ­ரது தலை­மை­யில் தேர்­தல்­கள் இடம்­பெ­று­வ­தால் தேர்­தல் மோச­டி­கள் இடம்­பெ­று­வ­தைத் தவிர்க்க முடி­யு­மென்ற நம்­பிக்கை மக்­க­ளி­டம் எழுந்­துள்­ளது. அர­சும் இதைப் பயன்­ப­டுத்­திக் கொள்­வதே நல்­லது.

எது எவ்­வாறு இருந்­த­போ­தி­லும் உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லொன்­றுக்கு நாட்­டின் வர­லாற்­றி­லேயே அதிக முக்­கி­யத்­து­வம் வழங்­கப்­பட்­டுள்­ளமை ஆச்­ச­ரி­யத்­தைக் கொடுக்­கின்­றது.

You might also like