வடபகுதி விவசாயிகளது சிரமங்கள் போக்கப்படல் மிக மிக அவசியமானது

வட­ப­குதி விவ­சா­யி­கள் தமது விவ­சாய முயற்­சி­க­ளில் பல்வேறு சிரமங்களையும் நட்டங்களையும் எதிர்­கொண்டு வரு­கின்­ற­னர். அவர்­கள் ஈட்­டு­கின்ற வரு­மா­னத்­தி­லும் நிச்­சயமற்ற நிலையே காணப்­ப­டு­கின்­றது. நெற்­செய்­கை­யில் ஈடு­ப­டு­ப­வர்­கள் மழை­யை­யும், சிறு­ப­யிர்ச் செய்­கை­க­ளில் ஈடு­ப­டு­ப­வர்­கள் நிலத்­தடி நீரை­யும் நம்­பி­யி­ருக்க வேண்டியுள்ளதால்தான், இந்த அவ­ல­நிலை தோன்­றி­யுள்­ளது.

வடக்­கில் அமைந்துள்ள யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் நெல் வயல்­கள் குறைந்த அள­வி­லேயே காணப்­ப­டு­கின்­றன. மழையை நம்­பியே இங்கு பெரும்போக நெற்­செய்கை மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. மழை அள­வுக்­கு அதி­க­மா­கப் பெய்­யும்­போது, நெற்­ப­யிர்­கள் அழி­வ­டை­கின்­றன. மழை பெய்­யும்­போது பயி­ர­ழி­வு­கள் ஏற்­பட்டு விவ­சா­யி­கள் பொரு­ளா­தார இழப்­புக்­களை எதிர்­கொள்­கின்­ற­னர். இதன் கார­ண­மா­கவே யாழ்ப்­பாண விவ­சா­யி­கள் நெற்­செய்­கை­யில் அதிக இலா­பத்தை எதிர்­பார்க்­க­மு­டி­யாத நிலை­யி­லுள்­ள­னர். சில வேளை­க­ளில் நட்­டத்­தை­யும் இவர்­கள் எதிர்­கொள்ள நேரிடுகிறது.

மழைவீழ்ச்சி குறைவடைந்தால் நிலத்தடி நீரின் நீர்மட்டம் குறைவடையும்

வன்­னிப் பெரு நிலப்பரப்பில் குளத்து நீர் மூலமான நீர்­ப­பா­ச­னத்தின் மூல­மாக சிறு­போக நெற்­செய்கை சில இடங்­க­ளில் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது. இது­வும் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­ட­அ­ள­வி­லேயே இடம் பெறு­கின்­றது. சீரான மழை வீழ்ச்சி கிடைக்­கும்­போது வன்­னிப் பிர­தேச விவ­சா­யி­கள் நெற்­செய்­கை­யில் ஓர­ளவு இலா­பத்தை ஈட்ட முடி­கின்­றது. கடந்த சில ஆண்­டு­ க­ளாக மழை­வீழ்ச்­சி­யில் எற்­பட்ட குழப்­ப­நி­லை­யால் அவர்­கள் நட்­டத்­தையே எதிர்­கொண்டு வரு­கின்­ற­னர். குடா நாட்­டைப் பொறுத்­த­வ­ரை­யில் நிலத்­தடி நீரை நம்­பியே சிறு­ப­யிர்ச் செய்­கை­கள் இடம்­பெற்று வரு­கின்­றன.

நீர்ப்­பா­சன வச­தி­கள் இங்கு இல்­லா­த­தால் இந்த நிலை காணப்­ப­டு­கின்­றது. போதி­ய­அளவு மழை பெய்­யும் போது­தான் தேவை­யான அள­வில் நிலத்­தடி நீரைப் பெற்­றுக் கொள்ள முடி­யும். மழை வீழ்ச்சி குறை­யும்­போது, நிலத்தடி நீரின் இருப்பின் அளவு குறைந்து விடும். இவ்­வா­றான தொரு நிலை ஏற்­ப­டு­மா­யின் கோடை காலத்­தில் பயிர்ச்­செய்­கை­யில் ஈடு­ப­டும்போது நீர்ப்­பற்­றாக்­குறை ஏற்­பட்டு விடு­வ­தும் உண்டு.

கடந்த சில மாதங்­க­ளாக சந்­தை­க­ளில் மரக்­கறி வகை­க­க­ளுக்­குப் பெரும் தட்­டுப்­பாடு காணப்­பட்­டது. விலை­யும் என்­று­மில்­லாத அளவு அதி­க­ரித்­தக் காணப்­பட்­டது. சந்தை வியா­பா­ரி­கள் தமது எண்­ணம் போன்று விலை­க­ளைத் தீர்­மா­னித்து அதிக இலாபத்தை ஈட்­டிக் கொண்­ட­னர். தற்­போது சந்­தை­க­ளில் இடம்­கொள்­ளாத அள­வுக்கு மரக்­கறி வகை­கள் குவித்து வைக்­கப்­பட்­டுள்­ளன. விலை­க­ளி­லும் தொய்வு காணப்­ப­டு­கின்­றது.

இன்­னும் சில நாள்க­ளில் அவற்­றின் விலை­க­ளில் மேலும் சரிவு ஏற்­பட்டு விடும். இத­னால் பாவ­னை­யா­ளர்­கள் நன்மை பொறு­கின்ற அதே வேளை, உற்­பத்­தி­யா­ளர்­க­ளான விவ­சா­யி­கள் எதிர்­பார்க்கும் இலா­பத்தை ஈட்ட முடி­யாத நிலைக்­குத் தள்­ளப்­பட்டு விடு­வார்­கள்.

தமது விளை பொருள்களை சந்தைப்படுத்தவதில் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர் வடபகுதி விவசாயிகள்

தற்­போது பயிர்ச் செய்கைக்கு உவந்த நிலங்களில் வர்த்­தக நிலை­யங்­க­ளை­ யும் அமை­கின்ற செயற்­பா­டு­கள் அதி­க­ள­வில் இடம் பெற்று வரு­கின்­றன. இத­னால் விவ­சாய நிலங்­க­ளின் அளவு சுருங்கிச் செல்­கின்­றது. இத­னால் விவ­சா­யி­கள் மட்­டு­மல்­லாது நுகர்­வோ­டும் பாதிப்பை எதிர்­கொள்­ளப் போகின்­ற­னர். அதேவேளை, குடா நாட்டு விவ­சா­யி­கள் தொடர்ந்தும் நிலத்­தடி நீரை தமது விவசாய முயற்சிகளுக்கு நம்­பி­யி­ருக்க முடி­யாது. இங்கு தொடர்ந்­தும் நிலத்­தடி நீர் தார­ாள­மா­கக் கிடைக்­கு­மெ­ன­வும் எதிர்­பார்க்க முடி­யாது.

ஆகவே உட­ன­டி­யாக இந்தப் பிரதேச விவசாயிகளுக்கான நீர்­ப­பா­சன வச­தி­கள் கிடைக்­கச் செய்ய வேண்­டும். இதன் மூல­மாக வட­ப­கு­தி­யின் விவ­சா­யத்தை அபி­வி­ருத்தி செய்ய முடி­யும். விவ­சாய விளை பொருள்­களை மொத்­த­மாக விற்­பனை செய்­யக்­கூ­டிய வச­தி­கள் இல்­லா­த­தால், அவற்றை விற்­பனை செய்­வ­தில் வட­ப­குதி விவ­சா­யி கள் சிர­மத்தை எதிர்­கொள்­கின்­ற­னர். முன்­னர் கொழும்­பில் உள்ள மொத்த வர்த்­தக நிலை­யங்க­ளுக்கு இவை எடுத்­தச் செல்­லப்­பட்டு விற்­பனை செய்­யப்­பட்­டன. தற்­போது தம்­புள்ள பொரு­ளா­தார மத்­திய நிலை­யத்துக்கு இவை எடுத்துச் செல்­லப்­ப­டு­கின்­றன. ஆனால் அதி­க­ள­வில் போக்­கு­வ­ரத்­துக் கட்ட ணங்கள் செலுத்த வேண்­டி­யுள்­ளது.

இதை­விட எடுத்துச்­செல்­லப்­ப­டு­கின்ற பொருள்­க­ளுக்கு எதிர்­பார்க்கும் விலை கிடைக்­கு­மென்ற உத்­த­ர­வா­த­மும் இல்லை. எடுத்­துச் செல்­லப்­ப­டு­கின்ற பொருள்­களை எவ்­வா­றா­யி­னும், எந்த விலைக்­கும் விற்­க­வேண்­டிய அவல நிலை­யும் எமது பகுதி விவசாயிகளுக்கு ஏற்படுகின்றது. ஏனென்­றால் அவற்­றைத் திரும்­ப­வும் எடுத்­து­வர முடிய­ாது.

வடபகுதி விவசாயிகளது  விவசாயப் பிரச்சினைகளுக்கு
விரைந்த தீர்வு அவசியம்

கொழும்பு அர­சும், வடக்கு மாக­ாண­ச­பை­யும் இணைந்து வடக்கு விவ­சா­யி­க­ளின் இத்த கைய பிரச்­சி­னைகளுக்கு உட­ன­டி­யாக ஒரு தீர்­வைக் காண வேண்­டும். குறிப்­பாக விளை­பொ­ருள்­க ­ளுக்கு நியா­ய­மான விலை­ கிடைக்­கக் கூடிய வகை­ யில் திட்­டங்­களை வகுக்க வேண்டும்.

குடா­நாட்­டின் நிலத்­தடி நீர் மாச­டைந்து விட்­ட­தாகக் கூறப்­ப­டும் நிலை­யில் அதற்கு மாற்­றீ­டான ஏற்­பா­டு­கள் இது­வரை மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. எதிர்­கா­லத்­தில் இத­னால் மோச­மான விளை­வு­கள் குடா­நாட்­டில் ஏற்­படக் கூடும் என்பதை மறுக்க முடி­யாது.

வட­ப­குதி மக்­க­ளின் உயிர்­நா­டி­யான விவ­சா­யத்­தைக் காப்­பாற்ற வேண்­டி­யது, எம் அனை­வ­ரி­ன­தும் முக்­கிய பொறுப்­பா­கும். இதி­லி­ருந்து தவ­று வோ­மா­யின், இங்கு விவ­சா­ய முயற்சி கள் முற்றாக அழிந்து விடும் ஏதுநிலை­ உரு­வா­கி­வி­டும்.

You might also like