தரு­ம­பு­ரம் –வட்­டக்­கச்சி சாலையைச் சீர­மைக்க­வு­ம்!

தரு­ம­பு­ரம் மருத்­து­வ­ம­னைக்கு அரு­கில் இருந்து வட்­டக்­கச்சி வரை செல்­கின்ற சாலை குண்­டும் குழி­யு­மா­கக் காணப்­ப­டு­கின்­றது என்று பிர­தேச மக்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.  இது­ தொ­டர்­பில் மேலும் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது,

பரந்­தன் -– முல்­லைத்­தீவு முதன்­மைச் சாலை­யில் இருந்து பிரிந்து வட்­டக்­கச்­சிக்கு செல்­லும் இந்­தச்­சாலை மிக­நீண்ட நாள்க­ளாக செப்­ப­னி­டப்­ப­ட­வில்லை. இப்­பி­ர­தே­சத்­தில் மீள்­கு­டி­யேற்­றம் இடம்­பெற்று 8 வரு­டங்­கள் கடந்­துள்­ளன. எனி­னும், இது­வரை குறித்த சாலை சீர­மைக்­கப்­ப­டாத நிலை­யி­லேயே காணப்­ப­டு­கி­றது.

இந்­தச் சாலை­யூ­டாக அவ­சர நோயாளி ஒரு­வரை மருத்­து­வ­ம­னைக்குக் கொண்­டு­செல்ல முடி­யாது. பாட­சாலை மாண­வர்­கள் உட்­பட அனை­வ­ரும் சிர­மங்­களை எதிர்­கொண்டு வரு­கின்­ற­னர். வாக­னங்­க­ளும் ஆமை வேகத்­தி­லேயே பய­ணிக்­கின்­றன. மழை­கா­லத்­தில் நிலைமை மிக­வும் மோச­மாக உள்­ளது.

எனவே, சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­கள் விரை­வில் இந்­தச் சாலையை சீர­மைத்­துத் தர­வேண்­டும்– – என்­ற­னர். இது­ தொ­டர்­பாக கரைச்சி கண்­டா­வளை பிர­தே­ச­சபை செய­லா­ள­ரி­டம் கேட்­டபோது: குறித்த சாலை பெரி­ய­தாக உள்­ள­தால் நிதி ஒதுக்­கீட்­டுப் பிரச்­சினை காணப்­பட்­டது. இந்த ஆண்டு நிதி கிடைக்­கும் பட்­சத்­தில் விரை­வில் சாலை சீர­மைக்­கப்­ப­டும்–என்­றார்.

You might also like