30 நாள்­க­ளுக்­குள்: 530 முறைப்­பா­டு­கள் – பவ்­ரல் அமைப்பு!!

தேர்­த­லுக்­கான வேட்­புத் மனு­தாக்­கல் செய்­யப்­பட்டு 30 நாள்­கள் நிறை­வ­டை­யும் நிலை­யில் இது­வ­ரை­யில் தேர்­தல் வன்­முறைச் சம்­ப­வங்­கள் தொடர்­பான முறைப்­பா­டு­கள் 243 கிடைக்­கப்­பெற்­றுள்­ளது. 287 தேர்­தல் சட்­ட­மீ­றல் சம்­ப­வங்­கள் பதி­வா­கி­யுள்­ளது. கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­களை தீவி­ரப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக பவ்­ரல் அமைப்பு தெரி­வித்­துள்­ளது.

பவ்­ரல் அமைப்­பின் நிறை­வேற்று பணிப்­பா­ளர் ரோஹண ஹெட்­டி­யா­ராச்சி கொழும்­பில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் மேலும் தெரி­வித்­த­தா­வது:

இரண்­டரை ஆண்­டு­க­ளுக்­குப் பின்­னர் பல கார­ணங்­க­ளுக்­காக பிற்­போ­டப்­பட்ட உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தல் இம்­முறை இடம்­பெ­ற­வுள்­ளது. உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்­தல் நாடு முழு­வ­தும் ஒரே நேரத்­தில் இடம்­பெ­ற­வுள்­ளமை சிறப்பு அம்­ச­மா­கும். தேர்­தல் ஆணைக்­குழு மிக அவ­தா­னத்­து­டன் செயற்­ப­டு­கின்­றது.

சுதந்­தி­ர­மான தேர்­தல் இடம்­பெ­று­வ­தற்கு தடங்­கல்­கள் ஏற்­ப­ட­லாம். இத­னைத் தவிர்ப்­ப­தற்­காக தேர்தல் அவ­தா­னிப்பு பணி­களை பவ்­ரல் அமைப்பு மேற்­கொண்டு வரு­கின்­றது. தேர்­லுக்கு முந்­திய காலம் தொடக்­கம் முடி­வ­டை­யும் வரை அவ­தா­னிப்பு பணி­களை மேற்­கொள்ளத் தயா­ரா­க­வுள்­ளோம். இம்­முறை தேர்­தலை முன்­னிட்டு தேர்­தல் கண்­கா­ணிப்­பா­ளர்­கள் 7 ஆயி­ரம் பேர் சேவை­யில் ஈடு­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­னர்.

தேர்­தல் காலங்­க­ளில் வேட்­பா­ளர்­கள் அரச ஊழி­யர்­களை தமது அர­சி­யல் நட­வ­டிக்­கை­க­ளுக்­காக பயன்­ப­ப­டுத்­து­வது தொடர்­பில் முறைப்­பா­டு­கள் பதி­வா­கி­யுள்­ளன. இது தொடர்­பில் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் -– என்­றார்.

You might also like