கிராம அலுவலர் கையை கடித்­துக் குத­றிய நபர்!!

கிரா­ம­ அலுவலர் ஒரு­வரை இனந்­தெ­ரி­யா­த­வர் கடு­மை­யாக தாக்கி கடித்­துக் காயப்­ப­டுத்­திய சம்­ப­வம் ஒன்று யாழ்ப்­பா­ணத்­தில் நடந்­துள்­ளது.

யாழ்ப்­பா­ணம் நகர்ப் பகு­தி­யில் உள்ள கிராம அலுவலர் பிரி­வி­லேயே இந்­தச் சம்­ப­வம் நடந்­துள்­ளது. கிராம அலுவலரி­டம் சென்ற ஒரு­வர் அவ­ரு­டன் வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்­டுள்­ளார். வாக்­கு­வா­தம் முற்றி அவ­ருக்­கும், கிராம அலுவலருக்­கும் இடையே மோதல் ஏற்­பட்­டது.

அந்த நபர் கிராம அலுவலரின் கையைக் கடித்­துக் குத­றி­னார் என்று தெரி­விக்­கப்­பட்­டது. கையில் பலத்த காயத்­துக்­குள்­ளான கிராம அலுவலர் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்டு சிகிச்­சை­கள் வழங்­கப்­பட்­டன என்­று தெரி­விக்­கப்­பட்­டது.

“எனது அலு­வ­ல­கத்­துக்கு மன­நோ­யாளி ஒரு­வர் வந்­தார். என்­னு­டன் கடு­மை­யா­கத் தர்க்­கம் செய்­தார். எனக்­கும், அவ­ருக்­கும் இடையே மோதல் நடக்­க­வில்லை. எனக்­குக் காய­மும் இல்லை.”- என்று கிராம அலு­வ­ல­ரைத் தொடர்பு கொண்­ட­போது கூறி­னார்.

“கிராம அலு­வ­லரை மன­நோ­யாளி ஒரு­வர் கடித்­தது உண்­மை­தான். மோதல்­கள் ஏதும் நடக்­க­வில்லை.”- என்று யாழ்ப்­பா­ணம் பிர­தேச செய­லர் கூறி­னார்.

You might also like