தேசி­யக் கூட்­ட­மைப்பு மீதான மக்­கள் நம்­பிக்கை தகர்ந்­துள்­ளது

இப்­ப­டிச் சொல்­கி­றார் பசில் ராஜ­பக்ச

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் மீது தமிழ் மக்­கள் கொண்­டி­ருந்த நம்­ப­கத் தன்­மை­யினை அந்­தக் கட்சி தகர்த்­துள்­ளது. வடக்கு மக்­க­ளுக்கு அந்­தக் கட்சி வழங்­கி­யி­ருந்த வாக்­கு­று­தி­களை கடந்த மூன்று ஆண்­டு­க­ளில் நிறை­வேற்ற முடி­யாது போயுள்­ளது.

அந்­தக் கட்சி வடக்­கில் அர­சி­யல் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க முடி­யாத நிலைக்­குத் தள்­ளப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு மகிந்த ராஜ­பக்­ச­வின் சகோ­த­ர­ரும், முன்­னாள் அமைச்­ச­ரு­மான பசில் ராஜ­பக்ச தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­ன­ணிக்கு வடக்­கில் நாம் எதிர்­பார்த்­ததை விட வர­வேற்­புள்­ளது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு எமக்­கெ­தி­ராக முன்­னெ­டுக்­கும் பரப்­பு­ரை­கள் அனைத்­தும் மக்­கள் மத்­தி­யில் பொய்ப்­பித்­துள்­ளது. ஏனெ­னில் கடந்த மூன்று ஆண்­டு­க­ளில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு அர­சு­டன் இணைந்தே வேலைத்­திட்­டங்­க­ளையே முன்­னெ­டுத்து வந்­தது.

வடக்கு மக்­கள் எதிர்­பார்த்த விட­யங்­கள் எத­னை­யும் நிறை­வேற்­றிக்­கொள்ள முடி­யாது போயுள்­ளது. அந்த மக்­கள் மூன்று பிர­தான விட­யங்­கள் எதிர்­பார்க்­கின்­ற­னர். அர­ச­மைப்­பின் ஊடா­கத் தீர்வு பெறல், பொரு­ளா­தா­ரத்தை முன்­னேற்­றல், அப்­பி­ர­தே­சத்தை அபி­வி­ருத்தி செய்­தல் என்­ப­னவே அவை. இந்த விட­யங்­களை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பால் நிறை­வேற்ற முடி­யாது போயுள்­ளது.

அந்­தக் கட்சி மீது மக்­கள் கொண்­டி­ருந்த நம்­பிக்கை இல்­லா­து­போ­யுள்­ளது. சிறி­லங்கா பொது­மக்­கள் முன்­ன­ணியை இன­வா­தக் கட்­சி­யாக சித்­த­ரித்து அர­சி­யல் நடத்­து­வ­தற்கு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு முற்­ப­டு­கி­றது. எனி­னும் எந்­தெ­வாரு இன­வாத நோக்­க­மும் எமக்­கில்லை. அத­னால்­தான் கட்சி ஆரம்­பிக்­கப்­பட்டு ஓராண்­டுக்­குள்­ளேயே நாம் வடக்­கில் தேர்­த­லில் போட்­டி­யி­டு­கி­றோம்.

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­மீ­தும் மக்­கள் கொண்­டி­ருந்த நம்­பிக்கை தற்­போது இல்­லாது போயுள்­ளது. அக்­கட்சி சிறந்த நிர்­வா­கம் கொண்ட கட்­சி­யா­கவே மக்­கள் நம்­பிக்­கொண்­டி­ருந்­த­னர். அந்த நம்­பிக்கை தகர்ந்­துள்­ளது. எரி­பொ­ருள், மின்­சா­ரம், விவ­சாய உரம் உள்­ளிட்ட துறை­க­ளைக்­கூட முறை­யாக நிர்­வா­கம் செய்­ய­மு­டி­யாத நிலைக்கு ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் தலைமை தள்­ளப்­பட்­டுள்­ளது.

ஐக்­கிய தேசி­யக் கட்சி ஆட்­சிக்கு வந்­தால் வர்த்­தக சமூ­கத்துக்கு சலுகை கிடைக்­கும் என­வும் கரு­தி­னார். அது­வும் பொய்ப்­பித்­துள்­ளது. ஊழல் மோச­டி­க­ளற்ற ஆட்சி முன்­னெ­டுக்­கும் என­வும் மக்­கள் எதிர்­பார்த்­த­னர். மத்­திய பிணை­முறி விவ­கா­ரத்­து­டன் அது­வும் பொய்­யா­கி­யுள்­ளது -– என்­றார்.

You might also like