தேசிய பரீட்சை வினாத்­தாள்­களை விடு­முறை காலத்­தில் திருத்தத் திட்­டம்!!

முத­லாம் தவணை கல்வி நட­வ­டிக்­கை­களை அனைத்­துப் பாட­சா­லை­க­ளி­லும் ஒரே தினத்­தில் ஆரம்­பிப்­ப­தற்குத் தீர்­மா­னித்­துள்­ளோம். ஜி.சி.ஈ. சாதா­ரண தரம் மற்றும் உயர் தரப் பரீட்சை விடைத்­தாள்­கள் திருத்­தும் பணி­களை விடு­முறை காலத்­தில் முன்­னெ­டுப்­ப­தற்கு ஆலோ­சித்து வரு­கின்­றோம். இவ்­வாறு கல்வி அமைச்­சர் அகி­ல­வி­ராஜ் காரி­ய­வ­சம் தெரி­வித்­தார்.

டி.எஸ்.சேனா­நா­யக்க கல்­லூ­ரி­யில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற 2018ஆம் ஆண்­டுக்­கான பாட­நூல் பகிர்ந்­த­ளிப்பு தேசிய விழா­வில் கலந்துகொண்டு உரை நிகழ்த்­து­கை­யி­லேயே மேற்­கண்­ட­வா­றுத் தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

பரீட்சை வினாத்­தாள்­களை திருத்­தும் நட­வ­டிக்­கை­யில் ஆசி­ரி­யர்­கள் ஈடு­ப­டு­வ­தன் கார­ண­மாக மாண­வர்­க­ளின் கற்­றல் நட­வ­டிக்­கை­கள் பெரி­தும் பாதிக்­கப்­ப­டு­கின்­றது. சாதா­ரண தரப் பரீட்­சை­யின் வினாத்­தாள் பத்­தி­ரங்­கள் டிசெம்­பர் மாத விடு­மு­றை­யில் திருத்தி முடிப்­ப­தற்­கான நட­வ­டிக்கை தொடர்­பில் கல்­வி­ய­மைச்­சில் கலந்­து­ரை­யா­டல்­கள் இடம்பெற­வுள்­ளது. மாண­வர்­க­ளின் கற்­றல் நட­வ­டிக்­கை­யை துரி­தப்­ப­டுத்­து­வதை நோக்­க­மாகக் கொண்டு இந்­தத் திட்­டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.

பரீட்சை வினாத்­தாள் திருத்­தும் வேலை­யில் 35 ஆயி­ரம் ஆசி­ரி­யர்­கள் ஈடு­ப­டுத்­தப்­ப­டு­வ­தன் கார­ண­மாக சில பாட­சா­லை­க­ளில் முத­லாம் தவ­ணைக்­காக கற்­றல் நட­வ­டிக்­கை­கள் காலம் தாழ்த்­தப்­ப­டு­வ­தன் கார­ண­மாக மாண­வர்­கள் பெரி­தும் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர். இத­னைக் கருத்­திற் கொண்டே விடு­முறை நாள்­க­ளில் விடைத்­தாள் மதிப்­பீட்டுப் பணி­களை மேற்­கொள்­ளத் திட்­ட­மி­டு­கின்­றோம் -– என்­றார்.

You might also like