தேர்­தலை நடத்­தவே காலம் வின­வப்­பட்­டது -சுசில் விளக்­கம்

அரச தலை­வர் தேர்­தலை நடத்­தும் காலத்தை அறிந்­து­கொள்­ளவே அரச தலை­வ­ரின் ஆட்­சிக் காலம் குறித்து வின­வப்­பட்­டதே தவிர அரச தலை­வர் தொடர்ந்­தும் ஆட்­சி­யில் நிலைத்து நிற்­ப­தற்­காக அல்ல. அரச தலை­வர் ஆட்­சிக்­கா­லம் குறைக்­கப்­பட்­டுள்ள போதி­லும் தற்­போ­தைய அரச தலை­வ­ருக்கு அது பொருந்­தாது என்று அமைச்­சர் சுசில் பிரே­ம­ஜ­யந்த தெரி­வித்­தார்.

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் செய்­தி­யா­ளர் சந்­திப்பு நேற்­றுக் கட்­சித் தலைமை அலு­வ­ல­கத்­தில் நடை­பெற்­றது. இதில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது;

அர­ச­மைப்­பின் 19ஆம் திருத்­தம் மூல­மாக அரச தலை­வ­ரின் ஆட்­சிக்­கா­லம் ஐந்து ஆண்­டு­க­ளாக குறைக்­கப்­பட்டது. அது தற்­போ­தைய அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் பொருந்­தும் ஒன்­றல்ல. அரச தலை­வர் தேர்­தலை எப்­போது நடத்­து­வது என்ற கேள்வி எழுந்த நிலை­யில் 2020ஆம் ஆண்டு தேர்­தலை நடத்த முடி­யும் என்று கூறப்­பட்ட நிலை­யில் சிலர் அதை மறுத்து 2021ஆம் ஆண்டு தேர்­தலை நடத்­தவே அதி­கா­ரம் உள்­ள­தாக கூறி­னார்.

அவ்­வா­றான ஒரு சர்ச்­சையை அடுத்தே உயர் நீதி­மன்­றத்­தின் மூல­மாக அறிந்து கொள்ள இவ்­வா­றான ஒரு கோரிக்கை விடுக்­கப்­பட்டது. மாறாக அரச தலை­வர் ஆட்­சியை தக்க வைக்­கவோ அல்­லது வேறு எந்த நோக்­கத்தை கொண்­ட­தல்ல.

அரச தலை­வர் தேர்­தலை அவர் ஐந்து ஆண்­டு­க­ளி­லும் நடத்த முடி­யும். அல்­லது ஆறா­வது ஆண்­டி­லும் அவர் ஆட்­சியை கலைக்க முடி­யும். முன்­னாள் அரச தலை­வர்­கள் இத­னைச் செய்­த­னர். மகிந்த ராஜ­பக்ச இரண்டு ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் தேர்­தலை நடத்­தி­னார்.

சந்­தி­ரிக்கா குமா­ர­துங்க ஒரு ஆண்­டுக்கு முன்­னர் தேர்­தலை நடத்­தி­னார். அரச தலை­வர் மைத்திரி­பால சிறி­சே­ன­வும் தான் விரும்­பி­னால் இந்த ஆண்­டு­க­ளில் தேர்­தலை நடத்த முடி­யும். அது அரச தலை­வ­ரின் நிலைப்­பா­டாக அமை­யும். சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யாக எமது தீர்­மா­னம் அல்ல -– என்­றார்.

You might also like