நாடா­ளு­மன்­றத்­தில் மோது­வது மிக­வும் மோச­மான செயற்­பாடு !

பிணை­முறி மோசடி விவ­கா­ரத்தை சந்­தர்ப்­ப­வாத அர­சி­ய­லாக்கவேண்­டாம் என்­கி­றார் ஹக்­கீம்

பிணை­முறி மோசடி விவ­கா­ரத்தை சந்­தர்ப்­ப­வாத அர­சி­ய­லுக்கு எதிர்க்­கட்­சி­கள் பயன்­ப­டுத்­திக் கொண்­டி­ருக்­கின்­றன. இந்த நி­லை­யில், நாடா­ளு­மன்­றத்­தில் பிணை­முறி மோசடி விவா­தம் நடை­பெ­றா­மல், கைக­லப்­புச் சம்­ப­வம் நடை­பெற்­றது மிக­வும் மோச­மான செயற்­பா­டா­கும். இவ்­வாறு சிறி­லங்கா முஸ்­லிம் காங்­கி­ர­ஸின் தலை­வ­ரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்­கீம் தெரி­வித்­தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
நாட்­டில் ஊழல், மோச­டி­கள் நடை­பெற்­றால் அதை மூடி­ம­றைப்­ப­தற்கு எவ­ரும் எத்­த­னிக்­க­வேண்­டிய அவ­சி­ய­மில்லை. பிணை­முறி விவ­கா­ரத்­தில் முறை­கே­டு­கள் நடை­பெற்­றி­ருந்­தால், தற்­போது நடை­ மு­றை­யி­லுள்ள தக­வ­ல­றி­யும் சட்­டம் மூலம் மக்­கள் அதனை தெளி­வாக அறிந்­து­கொள்­ள­மு­டி­யும்.

பிழை­யான தக­வல்­களை வழங்கி மக்­களைத் திசை­தி­ருப்­பு­வ­தற்கு எதிர்க்­கட்­சி­கள் முயற்­சித்­துக் கொண்­டி­ருக்­கின்­றன. பிணை­முறி முறை­கேட்டால் தேசிய உற்­பத்­தி­யில் நூற்­றுக்கு ஒரு வீதம் குறைந்­து­விட்­ட­தாக பந்­துல குண­வர்தன கூறு­வது பிழை­யான குற்­றச்­சாட்டு.

பிணை­முறி முறை­கேட்­டில் ஈடு­பட்­ட­தா­கக் கூறப்­ப­டும் நிறு­வ­னத்­தின் 10 ஆயி­ரம் மில்­லி­யன் ரூபா பெறு­ம­தி­யான கணக்­கு­கள் முடக்­கப்­பட்­டுள்­ளன. தற்­போது தொட­ரப்­பட்­டுள்ள நீதி­மன்ற வழக்­கில் குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் இழக்­கப்­பட்­டுள்ள பணம் அர­சுக்கே திரும்­பி­வ­ரும்.

ஒரு நிறு­வ­னம் மோசடி, குற்­றச்­செ­யல் மூலம் தவ­றான முறை­யில் இலா­பம் ஈட்­டி­யி­ருந்­தால், பணத்தை அர­சால் சுவீ­க­ரிக்க முடி­யும். பிணை­முறி மூலம் இழந்த பணத்தை அர­சால் மீளப் பெற்­றுக்­கொள்ள முடி­யும்.

டொல­ரொன்­றின் பெறு­மதி 150 ரூபா­வை­யும் தாண்­டி­யுள்­ள­தற்கு பிணை­முறி விவ­கா­ரமே கார­ணம் என்று ஒரு­வர் கூறி­யதை நான் கேட்­டேன். உண்­மை­யில், டொல­ரொன்­றின் பெறு­மதி இந்­த­ள­வுக்கு செல்­லு­மென்ற தீர்க்­க­த­ரி­ச­னம் 4 வரு­டங்­க­ளுக்கு முன்பே இருந்­தது.

மகிந்­த­வின் ஆட்­சிக்­கா­லத்­தில் பொரு­ளா­தாரக் கடன் தொகை­யொன்று, கடன் பெற்­றுக்­கொண்ட நேரத்­தில் அற­வி­டப்­ப­டும் வட்­டி­யின் மதிப்­பீட்­டுத் தொகை பற்றி பல பொரு­ளா­தார நிபு­ணர்­கள் தக­வல் வெளி­யிட்­டி­ருந்­த­னர். டொல­ரொன்­றின் பெறு­மதி 150 ரூபா­வை­யும் தாண்­டிச்­செல்­லும் என்­பது தொடர்­பாக அன்­றி­லி­ருந்தே கூறி­னார்­கள்.
இது­போன்ற நிலை உரு­வா­னது தொடர்­பாக மக்­க­ளுக்கு தெரி­யப்­ப­டுத்­த­வேண்­டும்.

சாதா­ரண மக்­க­ளுக்கு இது தொடர்­பாக எது­வும் தெரி­யாது. மத்­திய வங்­கி­யில் இடம்­பெற்ற கொள்­ளைச் சம்­ப­வத்தை சொல்­லிச் சொல்லி, இந்த அரசு பெரிய நிதி மோச­டிக்கு ஆளா­கி­ய­தா­க­வும், இத­னால் நாட்­டுக்­கு நிதி இழப்­பீடு ஏற்­பட்­ட­தா­க­வும் கிராம மக்­கள் மத்­தி­யில் போலிப் பரப்­பு­ரை­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

பிணை­முறி மோச­டி­கள் நடை­பெற்­றது என்­றா­லும், அவை வெளிப்­ப­டை­யா­னவை. இதற்கு முன்­பி­ருந்த அர­சில் எவ்­வித தக­வல்­க­ளும் வெளி­யா­க­வில்லை. எல்லா கொள்­ளை­யும் பகல்­நே­ரக் கொள்­ளை­யா­கவே நடை­பெற்­றது.

இதன்­மூ­லம் ஒரு சதத்­தைக்­கூட அர­சால் மீளப்­பெற முடி­ய­வில்லை. எத­னை­யும் நிரூ­பிக்­க­ மு­டி­யாத நிலை­யில் இந்த பணப் பயன்­பாடு நடை­பெற்­றுள்­ளது. முந்­திய ஆட்­சிக்­கா­லத்­தில் எது நடந்­தா­லும், எவ­ராக இருந்­தா­லும் தண்­டனை வழங்­கக்­கூ­டிய நட­வ­டிக்­கை­கள் எது­வும் நடை­பெ­ற­வில்லை. தற்­போ­தைய நல்­லாட்சி அரசு முன்­பி­ருந்த அர­சைப்­போ­லன்றி வித்­தி­யா­ச­மான முறை­யில் முன்­ன­கர்­வு­களை மேற்­கொண்­டு­வ­ரு­கி­றது.

கூட்டு அரசு என்ற முறை­யில் பிர­தான இரு கட்­சி­க­ளி­லும் சில சிர­மங்­கள் காணப்­ப­டு­கின்­றன. அது இயற்­கை­யான ஒரு விதி­யா­கும். இது அர­சி­ய­லில் விலக்­க­மு­டி­ யாத ஒன்­றா­கும். பிணை­முறி விவ­கா­ரத்­தைக் கார­ணம்­காட்டி எவ­ரும் குழப்­ப­ நி­லயை உரு­வாக்­க­வேண்­டிய அவ­சி­ய­மில்லை —– என்­றார்.

You might also like