தண்­டப் பத்­தி­ரம் வீடு தேடி வரு­மாம் -சாகல அறி­விப்பு

போக்­கு­வ­ரத்து குற்­றங்­க­ளில் ஈடு­ப­டும் சர­தி­க­ளுக்கு, அந்­தக் குற்­றம் இடம்­பெற்ற போது எடுக்­கப்­பட்ட ஒளிப்­ப­டத்­து­டன் தண்­டப் பத்­தி­ரத்தை வீட்­டுக்கே அனுப்­பும் முறைமை அடுத்த மாதம் முதல் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது. இவ்­வாறு சட்­டம் ஒழுங்கு அமைச்­சர் சாகல ரத்­னா­யக்க தெரி­வித்­தார்.

கொழும்­பில் நேற்று இடம்­பெற்ற நிகழ்­வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

போக்­கு­வ­ரத்து கட­மை­யில் ஈடு­ப­டும் பொலிஸ் அலு­வ­லர்­க­ளின் கட­மை­களை மேலும் இல­கு­ ப­டுத்­து­வோம். போக்­கு­வ­ரத்து குற்­றங்­க­ ளின் போது, ஒளிப்­ப­டத்­து­டன் நாம் தண்­டப் பத்­தி­ரத்தை சார­தி­யின் வீட்­டுக்கே அனுப்­பு­வோம். அவர்­கள் அதில் ஏதும் நியா­யங்­கள் கூற வேண்டி இருப்­பின் நீதி­மன்­றம் சென்று அத­னைச் செய்­து­கொள்­ள­லாம்.

இத­னூ­டாகப் பொலி­ஸார் தண்­டப் பணப் பத்­தி­ரம் கொடுக்க முற்­ப­டும் போது ஏற்­ப­டும் முரண்­பா­டு­கள் இல்­லா­மல்போகும். சாரதி அனு­ம­திப் பத்­தி­ரத்­தை­யும் இணை­யத்­தில் பெற்­றுக் கொள்­ளும் முறை­யில் கொன்­டு­வர உள்­ள­தால் அதன் பின்­னர் பொலி­ஸா­ருக்கு ஒரு உப­க­ர­ணத்­தைக் கொடுப்­போம். அதன் ஊடாகச் சார­தி­கள் தொடர்­பி­லான அனைத்து குற்­றங்­க­ளும் பொலி­ஸா­ரால் உடன் ஒரே பார்­வை­யில் பரீட்­சித்து நட­வ­டிக்கை எடுக்­கக் கூடி­ய­தாக இருக்­கும் – –என்­றார்.

You might also like