கிராம மட்­டங்­க­ளில் பரப்­பு­ரையை துரி­தப்­ப­டுத்த ரணில் பணிப்பு!!

பிணை­முறி மோசடி விவ­கா­ரம் தெற்கு அர­சி­ய­லில் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்ள நிலை­யில், மறு­பு­றத்­தில் குட்­டித் தேர்­த­லுக்­கான பரப்­பு­ரை­யும் சூடு­பி­டித்­துள்­ளது.

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி தலை­மை­யி­லான ஐக்­கிய மக்­கள் சுதந்­திர முன்­ன­ணி­யின் முத­லா­வது பரப்­பு­ரைக் கூட்­டம் அநு­ரா­த­பு­ரத்­தில் நேற்­று­முன்­தி­னம் நடந்து முடிந்­துள்ள நிலை­யில், ஐக்­கிய தேசி­யக் கட்சி தலை­மை­யி­லான ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யின் முத­லா­வது பரப்­பு­ரைக் கூட்­டம் எதிர்­வ­ரும் 18ஆம் திகதி கண்­டி­யில் நடை­பெ­ற­வுள்­ளது.

பிணை­முறி மோசடி விவ­கா­ரத்­தால் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் தேர்­தல் பரப்­புரை பெரும் பாதிப்­புக்­குள்­ளா­கி­யி­ருந்­தது. அனைத்­துக் கட்­சி­க­ளும் தீவிர பரப்­பு­ரை­களை முன்­னெ­டுத்­து­வ­ரும் சூழ­லில் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் கிராம மட்­டத்­தில்­கூட இன்­ன­மும் முறை­யான பரப்­பு­ரையை ஆரம்­பிக்­க­வில்லை.

இதன் கார­ண­மாக நாளொன்­றுக்கு 10 பொதுக் கூட்­டங்­க­ளை­யா­வது நடத்­து­மாறு சிறி­கொத்­தா­வி­லி­ருந்து ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் அனைத்­துத் தொகுதி அமைப்­பா­ளர்­க­ளுக்­கும் உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

எதிர்­வ­ரும் 18ஆம் திகதி பிற்­ப­கல் 3 மணிக்கு ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யின் முத­லா­வது தேர்­தல் பொதுக் கூட்­டம் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யில் கண்டி பொதுச் சந்­தை­யில் நடை­பெ­ற­வுள்­ளது.

You might also like