Leading Tamil News website in Sri Lanka delivers Local, Political, World, Sports, Technology, Health and Cinema.

பாட­சாலை ஆரம்­பித்­த­தும் பரீட்சை; வடக்கு மாகா­ணத்­தில் புதுமை!

எங்­கும் நடை­பெ­றாத வகை­யில் வடக்கு மாகா­ணத்­தில் 2018ஆம் ஆண்டு கல்வி நட­வ­டிக்­கை­க­ளுக்­காக பாட­சா­லை­கள் ஆரம்­பித்­த­வு­ட­னேயே மாகா­ணக் கல்­வித் திணைக்­க­ளம், பரீட்­சை­கள் நடத்­தும் செயற்­பாட்டை இலங்­கைத் தமி­ழர் ஆசி­ரி­யர் சங்­கம் வன்­மை­யா­கக் கண்­டித்து எச்­ச­ரிக்கை செய்­கி­றது.

சங்­கத்­தின் நிர்­வா­கச் செய­லா­ளர் கே.நல்­ல­தம்பி அனுப்பி வைத்­துள்ள செய்­திக்­கு­றிப்­பில் இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
செய்­திக்­கு­றிப்­பில் மேலும் உள்­ள­தா­வது:

பாட­சா­லை­கள் கற்­றல் நட­வ­டிக்­கை­க­ளுக்­காக ஜன­வரி 2ஆம் திகதி ஆரம்­ப­மா­னது. பாட­சாலை ஆரம்­ப­மாகி பிள்­ளை­கள் புதிய வகுப்­பு­க­ளில் நிலை­கொள்ள முன்­னரே பரீட்­சையை நடத்து ­கின்­றது வடக்கு மாகா­ணக் கல்­வித் திணைக்­க­ளம்.

அது­வும் ஆரம்­பப் பிரிவு மாண­வர்­க­ளுக்கு பரீட்­சையை நடத்­து­வது என்­பது அறி­வி­லித்­த­ன­மான செயற்­பாடு. பரீட்சை என்­றாலே எல்­லோ­ருக்­கும் பதற்றம். அதி­லும் குழந்­தை­க­ளுக்கு பரீட்­சை­களை நடத்­து­வது உள­வி­யல் ரீதி­யாக எத்­த­கைய பாதிப்பை ஏற்­ப­டுத்­தும் என்­பதை மாகா­ணக் கல்­வித் திணைக்­க­ளம் அறி­யா­தி­ருப்­பது பாட­சாலை அதி­பர்­கள், ஆசி­ரி­யர்­கள் மத்­தி­யில் பெரும் அவ­நம்­பிக்­கை­யைத் தோற்­று­வித்­துள்­ளது.

வடக்கு மாகா­ணக் கல்­வித் திணைக்­க­ளம் இது­போன்ற அறி­வி­லித்­த­ன­மான பல செயற்­பா­டு­க­ளைத் தொடர்ந்­தும் முன்­னெ­டுக்­கு­மாக இருந்­தால் பல விட­யங்­களை வெளிப்­ப­டுத்தி உரிய நட­வ­டிக்கை எடுக்க இலங்­கைத் தமி­ழர் ஆசி­ரி­யர் சங்­கம் தயங்­காது. மாகா­ணக் கல்­வித் திணைக்­க­ளத்­தின் ஆரம்ப பிரி­வுக்­குப் பொறுப்­பான பணிப்­பா­ள­ரின் துறை­சார் திற­மை­யை­யும் பரி­சோ­திக்­கும் நிலை ஏற்­ப­டும்.

ஏற்­க­னவே மாகா­ணக் கல்­வித் திணைக்­க­ளம் நடத்­திய பரீட்­சை­க­ளில் பல குறை­பா­டு­கள் இருப்­ப­தைப் பல­ரும் சுட்­டிக்­காட்­டி­ யி­ருந்த நிலை­யில் தாங்­கள் நினைத்­ததை நடத்­து­வோம் என மாகா­ணக் கல்­வித் திணைக்­க­ளம் கங்­க­ணம்­கட்டி நிற்­பது ஆபத்­தா­னது என்­ப­த­னை­யும் சங்­கம் சுட்­டிக்­காட்­டு­கின்­றது.

அதே­நே­ரம் ஆசி­ரியை ஒரு­வ­ருக்கு மாகா­ணக் கல்­வித் திணைக்­க­ளத்­தால் வழங்­கப்­பட்ட இட­மாற்­றம் நீதி­மன்­றத்­தால் இரத்­து­செய்­யப்­பட்டுள்ளது, இது­போன்ற பல செயற்­பா­டு­கள் சட்­டத்­துக்­குப் புறம்­பாக வடக்கு மாகா­ணத்­தில் நடை­பெ­று­வ­தும் புதி­தான ஒன்­றல்ல.

இது பற்றி நாம் அவ்­வப்­போது சுட்­டிக் காட்­டி­னா­லும் அவை திருத்­தப்­ப­டுவதாக இல்லை. ஆனா­லும் இவை தொட­ரா­மல் இருப்­ப­தற்­கும் தவ­று­கள் நடை­பெ­றா­மல் இருப்­ப­தற்­கும் மாகா­ணக் கல்வி அமைச்சு விரைந்து நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்–என்­றுள்­ளது.