பசுவை வெட்டிக் கொன்றமைக்கு- சிவசேனை கடும் கண்டனம்!!

யாழ்ப்­பா­ணம் நாவாந்­து­றைப் பகு­தி­யில் கன்று ஈனும் நிலை­யில் இருந்த பசுவை வெட்­டிய சம்­ப­வத்­துக்கு சிவ­சேனை அமைப்பு கடும் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளது.இது தொடர்­பாக அந்த அமைப்­பின் தலை­வர் மற­வன்­பு­லவு சச்­சி­தா­னந்­தன் தெரி­வித்­த­தா­வது,

யாழ்ப்­பா­ணம் நாவாந்­து­றைச் சந்­தைப் பகு­தி­யில் கன்று ஈனும் நிலை­யில் இருந்த பசுவை வெட்டி இறைச்­சி­யாக்­கிய பின்­னர் அங்கு கொட்­டப்­பட்ட கழி­வு­க­ளுக்­குள் இருந்து இறந்த நிலை­யில் கன்­றுக் குட்டி ஒன்­றும் மீட்­கப்­பட்­டது. இந்­தச் சம்­ப­வம் அந்­தப்­ப­குதி மக்­களை அதி­ருப்தி அடைய வைத்­துள்­ளது.

இந்த சம்­ப­வத்தை எமது அமைப்பு கடு­மை­யாகக் கண்­டிக்­கின்­றது. வடக்­கில் மாட்­டு­றைச்­சிக் கடை­களை நடத்­து­ப­வர்­க­ளில் பலர் பொலி­சா­ரு­டன் இணைந்து இவ்­வா­றான சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். பொது­வா­கவே தீவ­கம், காரை­ந­கர், பூந­கரி போன்ற இடங்­க­ளில் உள்ள பசுக்­களைக் கடத்தி சட்­ட­வி­ரோ­த­மாக இறைச்சி ஆக்­கு­வ­து­டன் அதனை இங்கு விற்­பனை செய்­வது மட்­டு­மன்றி தென்­னி­லங்­கைக்­கும் கடத்திச் செல்­கின்­ற­னர்.

மாடு­களை இறைச்சி ஆக்­கா­தீர்­கள்! அதனை உண்­ணா­தீர்­கள்! என நாம் பல இடங்­க­ளில் எமது அமைப்­பின் ஊடாக பரப்­பு­ரை­கள் செய்து வரு­கின்­றோம். இந்த நிலை­யி­லும் பலர் மாடு­களை இறை­ச்சி­யாக்­கும் வேலை­களை செய்து வரு­கின்­ற­னர். இது மிக­வும் கொடு­மை­யான விட­ய­மா­கும்.

வடக்கு மாகா­ணத்­தில் இந்­துக்­கள், முஸ்­லிம்­கள், கிறிஸ்­த­வர்­கள் நல்­லி­ணக்­கம் மற்­றும் ஒற்­று­மை­யு­டன் வாழ­வேண்­டு­மா­னால் இந்­துக்­கள் பன்­றியை கொல்­லக் கூடாது. முஸ்­லிம் மற்­றும் கிறிஸ்­த­வர்­கள் மாட்­டைக் கொல்­லக் கூடாது.

இலங்­கை­யில் பசுக்­களை கொல்­லக் கூடாது என சிங்­கள மக்­கள் விரும்­பு­ கின்­றார்­கள். அதனை எமது மக்­க­ளும் கால­கா­ல­மாக வலி­யு­றுத்தி வரு­கின்­ற­னர். எமது மண்­ணில் ஆயி­ரம் ஆயி­ரம் ஆண்­டு­கா­ல­மாக பசுக்­களை கொல்­லக் கூடாது என்ற நிலை இருந்­தது. இதனை வந்­தே­றி­கள் உடைத்­தெ­றிய நினைக்­கக் கூடாது. ஆகவே பசுக்­களை கொல்­லக் கூடாது என்­பது தொடர்­பாக அரசு இறுக்­க­மான சட்­டங்­களை கொண்­டு­வந்து நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டும்– -என்­றார்.

You might also like