வட­கொ­ரிய அதி­ப­ரு­டன் பேச்சு நடத்­தத் தயார்

தென்­கொ­ரிய அதி­பர் அறி­விப்பு

கொரியத் தீபகற்பத்தில் அமைதி திரும்ப வேண்டுமாயின் வட­கொ­ரிய அதி­ப­ரு­டன் பேச்சு நடத்­தத் தயார் என்று தெரி­வித்­துள்­ளார் தென்­கொ­ரிய அதி­பர் மூன் ஜெ இன்.

கடந்த இரண்டு ஆண்­டு­க­ளாக வட­கொ­ரி­யா­வுக்­கும் தென்­கொ­ரி­யா­வுக்­கும் இடையே கடும் பகை நிலவி வந்­தது. தென் கொரி­யா­வில் அடுத்த மாதம் நடை­பெ­ற­வுள்ள குளிர்­கால ஒலிம்­பிக் தொட­ரில் வட­ கொ­ரியா பங்­கேற்க விருப்­பம் தெரி­வித்­தது.

இதை­ய­டுத்து இரண்டு நாடு­க­ளுக்­கும் இடை­யில் உயர்­மட்­டப் பேச்சு நடை­பெற்று அந்­தப் பேச்சு வெற்­றி­ய­ளித்­துள்­ளது.
இந்த நிலை­யில் வட­கொ­ரிய அதி­பரை நேரில் சந்­திக்­கத் தயார் என்­றும் தெரி­வித்­தார் தென்­கொ­ரிய அதி­பர் மூன் ஜெ இன்.

‘‘இரு­த­ரப்பு உற­வு­களை மேம்­ப­டுத்­து­வது அணு­வா­யுதப் பதற்­றத்தை முடி­வுக்கு கொண்டு வரும் என்­கிற பட்­சத்­தில் வட­கொ­ரிய அதி­பர் கிம் ஜோங் உன்­னு­டன் பேச்சு நடத்­தத் திறந்த மன­து­டன் உள்­ளேன்’’ என்று மூன் ஜெ இன் மேலும் தெரி­வித்­தார்.

You might also like